பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 221 534. (அருக்கு) அருமை வாய்ந்த (உடல்) நலத்தைக் கெடுப்பவர்களாம் (பொதுமகளிருடைய) மனத்துக்கு ஒத்த (இயைந்த) (மனதுக்கு இன்பந் தருதற்கு வேண்டிய) ஆசைகொண்டு தளர்ச்சி யடையாமலும். வலிமை வாய்ந்த காலனுக்கு (காலன் என் உயிரைக் கொள்வதற்கு வேண்டிய) அடிப்படையைக் கோலி - அதனால் மிகவும் மனம் வேறுபாடு அடைந்து அழியாமலும். பிறவிக்கு ஏதுவாகும் செய்கையோரது நட்பை மிகவும் (கொண்டாடிக்) கைக்கொண்டு, கலிபுருஷனுக்கு இடமாம் (பிறவிக்) கடலிற் பிறவாமலும் நீ என்மீது மனம் வைத்து (எனக்கு உனது) திருத்தாளைத்தந்து கலைஞானத்தையும் உபதேசிப்பாயாக ஒருமுறை உன்னைத் தியானித்து உனது இரண்டு திருவடிகளையும் நிரம்ப உரைப்பவர்களுடைய (அல்லது இருக்கால் - வேதமந்திரங்களால் - நிரம்ப ஒதுபவர்களுடைய) உள்ளத்தில் உறைபவனே! வலிமை பொருந்திய தோளிலே குறத்தேனை (வள்ளியை) எடுத்துக்கொண்டு மறைந்து ஒடின வெற்றி பொருந்திய குமரேசனே! ஆணவங்கொண்டு கர்வங்கொண்டு; (சுரச்சூர்) சுரர்களாகிய தெய்வத்தன்மையோரை, (நெருக்கு) ஒடுக்கிய - அந்த போருக்குவந்த - சூரன் இறக்கப் போர் செய்த வேலனே! நிலைபெற்ற இப் பூமியில் (தி யுருவாகத்) திரண்ட திரு அண்ணாமலையில் திருக்கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (கலைப் போதகத்தைப் புகல்வாயே)