பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 231 539. இமராஜன் - பனிக்கு அரசனாகிய - நிலா - சந்திரன் வீசுகின்ற நெருப்பாலும். இளவாடை (மெல்லிய தென்றற்காற்றும்), ஊராரும் வருத்துகின்ற தன்மையாலும் போர்க்கென எழுந்த மன்மதன் தொடுக்கும் (மலர்ப்) பாணங்களாலும் தனித்துக் கிடக்கும் மானன்ன இப்பெண்ணின் உயிர் சோர்கின்றதே, அதற்கு ஒரு வழிகூறி அருளுவாயாக குமரனே! முருகனே! சடைமுடிப் பெருமானுக்குக் குருநாதனே! குறவர்பெருமகள் வள்ளியின் ஆசையை நிறைவேற்றின அழகிய மார்பனே! பொன்னுலக வாழ்வைத் தேவர்களுக்கு அன்று அருளியவனே! திருவண்ணாமலை வீதியில் வீற்றிருக்கும் பெருமாளே. (அருள்வாயே). 540. சுவை கொண்டதும், புணர்ச்சியின்பம் தருவதுமான கொங்கைகள் மார்பில் அழுந்த, நெற்றியில் வேர்வை துளிர்க்க (தோன்ற), காமம் பெருகும் இடங்கண்டு அங்கு விரல் நகக்குறி தைக்க, ரத்னம்போல ஒளிபெருக, (இன்ப ஒளிமயமாய்), இசலி இசலி (மாறுபட்டு மாறுபட்டு அடிக்கடி பிணக்கு - ஊடல்கொண்டு, ஊடல்கொண்டு) உபரித லீலை - உபரி சுரதம் (மேல்விழும் புணர்ச்சி லீலைகளை விளையாடி, நூல்போலும் இடை துவள, உள்ளத்தில் களிப்புடனே. இருவர் உடலும் ஒன்றுபட்டு ஒருருவாகி இன்பந்தர, முகம்மேலே அழுந்த கூந்தல் அவிழ்ந்துவிழ, வளைகள் ஒலிக்க, கண் என்னும் (அரவிந்தம்) தாமரையில் (லகரி ப்ெருக) - மயக்கம் பெருக - அதரபானம் (வாயிதழ் ஊறலை) ஆசைக்குத் தக்கபடி உண்ணவேண்டிய முறையில், உண்ண, பரிவால் உரையெழ அன்பு காரணத்தால் (சில) சொற்கள் பேச,