பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 299 567. (தமரம்) ஒலி செய்கின்ற (குரங்களும்) (கால்) குளம்புகளும், (கார்) கரிய நிறமுடைய (இருட்பிழம்பு) - இருளின் திரட்சி பூசினது போன்ற உடலும், பார்க்கும் பார்வையில் எரிகின்ற நெருப்பைக் கக்குகின்ற கண்களும், (காளம்) ஊதுகொம்பு போன்ற நீண்ட கொம்புகளும் உள்ள (எருமைமேல்), (கதம்) கோபம் நிறைந்த (கடமா) மதயானை போன்ற எருமைமேல் ஒப்பற்ற நிலையில் வருகின்ற யமன் பாசக்கயிற்றை வீசி எறிந்து கொல்ல வருவான் என்கின்ற மனக்கவலையில் இருந்து, சுற்றத்தார் அழ, மக்களும் துக்கமுற்று வருந்த மரணம் குறுகிக்கூடும் நாளில். (நீ) தாமரையன்ன திருமுகங்களும், அழகுடன் விளங்கும் நகையும், நீண்ட கண்களும், காதில் விளங்கும் பொன்னாலாய குதம்பை) காதணியும், தோடு (தோடு என்கிற காதணியும், வஜ்ரம் (வைர ரத்னத்தால்) ஆகிய (அங்கதம்) தோளில் அணியும் வாகுவலயம் என்கிற ஆபரணமும், வெற்றி பொருந்திய ஒளிவீசும் வேலாயுதமும் வேகத்தில் உலக முழுமையும் பயணம் போய்வந்த மயிலும், விளங்குவதும் அலங்காரமா யுள்ளதுமான அழகிய சதங்கை, வீரக்கழல், ஒலிசெயும் தண்டை - இவை யணிந்துள்ள திருவடியும் - இவை யாவும் ஒன்றுபடக் (கூடிட) வந்த வரத்தை எனக்கு அருள் புரிவாயாக இமயமலையில் தோன்றிய பொன்னனையாள், பாவை (பதுமை போல்வாள்), பச்சை நிறத்து வஞ்சிக்கொடி போல்வாள், அண்டங்களை எல்லாம் பெற்ற பூவை (நாகண வாய்ப்புள் போல்வாள்), சத்தி, அம்பை, ஆகிய பார்வதி தேவியின் இளங் கொங்கையின் செழுமையான பாலைக் குடித்து, விளங்கிநின்ற (பாண்டியனுக்கு இயற்கையாயிருந்த) (கூனை) நிமிர்த்தருளியவனே! (அல்லது) விளங்கும் இயற்றமிழ் ஆதிய_தமிழை வளர்த்தவனே! (அல்லது - விளங்கும் உலக ஒழுக்கங்களைச் சீர்ப்படுத்தினவனே)