பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 397 (அந்தக் கடலில் தோன்றிய) அரம்பையாதிய நடன மாதர்களையும் (சிந்தாமணி, காமதேனு, உச்சைச் சிரவம் என்னும் குதிரை முதலிய பல பொருள்களையும்) பங்கிட்டு அளித்து நடனம்கொண்ட லகூழ்மிகாந்தன், (வண்டர்) மங்கல பாடகர் பாடிநின்ற இலங்கை வேந்தன் ராவணனுடைய தலைகள் பொடியாம்படி வென்ற மாயவன். தனது வயிற்றில் அண்டங்கள் முழுமையும் அடங்க உண்ட உள்ளங்கையன் - ஆகிய திருமால் புகழ, விளங்கின திரிபுரங்களைப் பொடிசெய்த எந்தை சிவபெருமானுடைய பாகத்தில் இருக்கும் எழுச்சிகொண்ட (சகல கலைகளுக்கும் தலைவியாகிய மங்கை வாகீசுவரியாம் சங்கரி மைந்தனே என்று பிரமனும் புகழ, ஒள்ளிய மேலான, (தில்லைத்) திரு அம்பலத்தில் விளங்கும் தம்பிரானே! (தீய சிந்தையாமோ) 605. அறிவைக் கலக்கும் மனக்கவலை, துன்பம் (கொண்ட) (கடம் தொந்தம் செறிந்து) இவ் வுடலிற் சம்பந்தப்பட்டு நெருங்கியுள்ள, (ஐந்து இந்த்ரியம் பந்தம்) (மெய், வாய், கன். மூக்கு செவி) என்னும் ஐம் பொறிகளால் உண்டாகும் துன்பத்தில் வேதனைப் படுகின்ற ஏழை. நிலைமையான (நற்) குணம் ஒன்றும் இல்லாதவன், (பண்டன்) ஆண்மையில்லாதவன், (தலன்) கீழானவன், குன்டன்) இழிந்தோன், (சலன்கண்டன்) கோபவிரன் இத்தகைய நான் (அறிவு) தெளிந்து உனது பழைய அடியான் என்னும் உயர்நிலையை அடையும்படி (நீ)