பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 409 609. சந்திரனைப்போற் சீதள காந்தியைத் தரும் காதோலை விளங்க, கொங்கைகள் மந்தரகிரிபோல அசைய, நல்ல நீர்மை பெருக, அழகிய சண்பகமாலை விளங்கும் மெல்லிய கூந்தல் மேகம்போல விளங்க. குளிர்ந்த மீன் போன்றதும், அம்பு போன்றதுமான கண்களை உடையவர்கள் . இளம்பிறை விண் (விண்ணில் விளங்கும்) இளம்பிறை போன்ற புருவத்தினர். (இதழ் கோவையின் கனி) கொவ்வைக்கனி போன்ற வாயிதழ்களை உடையவர், (பொது மகளிருக்கு உரிய) (சொந்தமான) ஸாஹஸச் செயலை நிறையச்செய்யும் நகை (சிரிப்பு) பல் ஒளி கதிரொளி (சூரியன் ஒளி) போன்று உடையவர் சங்கு போன்ற கழுத்தினை உடையவர், (தேமலும் மார் பரம்ப) தேமல் மார்பில் பரவ, நல்ல சந்தனக் கலவையின் நிறைந்த அழகைப் பெற்ற, சட்டை அணிந்த அழகிய கழுத்தின் (தொண்டையினின்றும்) உண்டான ஒலி கொஞ்சுகின்ற ரம்பைபோன்ற மாதர்கள் மீது. கண் மகிழ மிக்க ஆசை பூண்டு, அவர்களுடன் பஞ்சு மெத்தைமீது குலவி விளையாடினும், அழகிய உனது கண்கள் பன்னிரண்டும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் (என்) மனத்திற் கொள்வேன் (தியானிப்பேன்); இந்திரலோகத்தில் உள்ள தேவர்கள் இன்பம்பெறவும், சந்திர சூரியருடைய தேர்கள் உலாவி வரவும், அஷ்டகிரிகளில் இருந்த சூரர் கூட்டங்கள் இறந்தொழியவும் கண்ட வேலனே! இலக்குமி தேவியின் கணவராம் திருமாலும், பிரமனும் ஒளிவீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவமூர்த்தியும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே தரும சாஸ்திரத்தை எடுத்து ஒதிய கந்தவேளே!