பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 423 (வளையல்) செட்டியின் வேடத்துடன் (தினை) வனத்துக்குச் சென்று அங்கே இச்சா சத்தி மயமான வள்ளி நாயகியை அன்புகனிந்து (தெட்டி) வஞ்சித்துக் கவர்ந்து வந்து புலியூரில் (பொன்) அம்பலத்தில் விளங்கி நிற்கும் பெருமாளே! (வேத விந்தையொடு புகழ்வேனோ) 613. விஷம்போல மனத்தில் வஞ்சகம் கொண்டுள்ளவர்களை நம்புதல் கெடுதலாகும் என்று நினைத்து அடியேன் - (உன்மீது) நண்பு பெருக, (உனது) திருவடிகளில் அன்பு பொருந்த (உன்னைத்) தேடி உன்னை "எங்கள் அப்பா சரணம்" என்று ஒலிடுகின்றேனே அந்தக் கூச்சல் உன் காதில் ஏறவில்லையா! (பெண்கள்) தேவசேனை - வள்ளி என்னும் நாச்சியார்களின் மேல் உன் கண்பார்வை உள்ளதால் கேட்க இலையோ)! உனது (உபதேச) மொ ழிகளைத் தாழ்வு படுத்தி மேற் செல்வார் ஆர்? வரம்பு மீள்வார் ஆர் (ஒருவரும் இலர் என்றபடி). உனக்கே (எனைப் புரத்தல்) பாரமாகும்; (உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணைவர் உளர் (ஒருவரும் இல்லையே); தேவர்களுக்கு நீ உற்ற துணையாய் ஆனது போல என் முன்னும் வந்து தோன்றி அருளுக; பிரமனை எட்டி அவனது முடியில் முன்பு குட்டுப் பொருந்தும்படி மிக்க கண் களிப்புடன் செலுத்தின செவ்விய கையை உடையவனே! கண் கயல்மீன்போல உள்ள பாவை அனைய குற மங்கை (வள்ளியின்) அழகிய தோளைத் (உடலோடுடலாய்த்) தழுவும் சட்டையை அணிந்த தன்மையை ஒக்கத் தழுவி அண்ையும் அழகிய தோளனே உடலிற் சட்டையணிவது போல வள்ளியைத் தழுவி அணைந்த தோளனே! 00 ஆவதினின் ஆவதுபோல். *** தோணாய் - தோற்றாய் iii பிரமனைக் குட்டியது. பாடல் - 608, பக்கம் 406 பார்க்க # குட்டு ஏய. 200 சட்டை உடலைத் தழுவுவதுபோல வள்ளியின் உடலை முருகன் தழுவினன்.