பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 501 மலர்களைச் சொரிந்து, அழகிய கரங்களைக் கூப்பித்தொழுது (உனது) ஒள்ளிய திருவடிகளை மனத்திற் கொண்டு, ஒத்-புகழ்ந்து நிற்க (அந்தம்) அழகினைக் கொண்ட குறப்பெண்-சிறுமியாகிய வள்ளியின் அங்கங்களை அணைந்த வெற்றியைக் கொண்டு, அழகிய பொன் அமை - பொன் அமைப்பு - பொன்னம்பலம்-விளங்கும்-புலிச்சுரம் என்னும் புலியூரில் அழகிய - திருநடத்தைக் கொண்டவராகிய கூத்தப்பிரானாய் விளங்கும் கந்தனாகிய அழகிய பெருமாளே! (கந்தப் பெருமாளே!) அல்லது திருநடங் கொண்டு நிறைந்து பொலியும் கந்தப்பெருமாளே! அல்லது திருநடம் கொண்ட சிவபிராற்குரிய கந்த அம் பெருமாளே!) (செம்பொன் கழல்தாராய்) 642. சாந்தும் புனுகு சட்டமும் தோய்ந்து அழகு நிறைந்த கூந்தலை விரும்பியும். கொங்கையே தலையணையாகஅதன்மேற் சாய்ந்தும், ஆடம்பரத்துடன் வாழ்ந்து காம இச்சை இன்பத்தில் காந்தமும் ஊசியும்போல வசீகரிக்கப்பட்டு, மாதர்களிடத்தே. மிக்கெழுந்த அன்பு மனம் தொலைந்து, உன்னுடைய திருவடிகளை அணுகி ஆய்ந்தறிந்து உணர்கின்றோம் என்ற உணர்ச்சியில்லாத மெளன நிலையில் அடிநாயேனாகியநான் குவிந்து அவிழ்ந்த தாமரையன்ன (பூம்பத கோதிலிணைபூண்டு) அழகிய திருவடிகளாகிய குற்றமற்ற இணையை (இரண்டினையும்) (பூண்டு), மனதிற்கொண்டு உறவாடுதினம் - அன்பு கொள்ளும் நாள் (ஒன்று) உள்ளதோ (கூறியருளுக) (ஆதிசேடனாகிய) பாம்பின்மேலே இன்பமாக விளங்கிக் கண்துயில் கொள்ளுபவரும், நீண்டிடு (நீண்டரூபம் கொண்ட வருமான) (மால்) திருமாலுடன் பிரமன் காண முடியாது நின்று.

  • திருப்புகழ் 246 பக்கம் 118 பார்க்க