பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 507 தைக்கும்படியான காம இன்ப லீலைகளைச் செய்து, உறவு முறையிலே விளையாடி, வீட்டுக்குள் அழைத்துக் கொண்டுபோய், வஞ்சனை எண்ணத்துடன் - படுக்கையின் மேலே இருத்தி, (இது காலம் என் நீர் போவது" என) இது தக்க சமயம் ஆச்சே! ஏன் நீர் போகின்றீர்" என்று சொல்லித் தட்டில் புனுகும், பன்னிரும் பலவகைய ஜவாதும் வைத்து வந்தவருடைய உடலிற் பூசியும். (முகத்தோடு) முகம் வைத்து இன்ப ரசமான வாய் இதழ் ஊறல் பெருக, கூந்தல் கலைந்து குலைய, சுழலுவனவும், வாள் போன்றனவுமான கண்கள் (பதற) துடிக்க - வட்டமான கொங்கை மார்பிற் புதைந்து திகழ, வேர்வை உண்டாக, தோளை இறுக அணைத்துப் புடைவை நெகிழ, (மச்ச விழி) மீன்போன்ற கண்கள் (பூசலிட) காமப்போரை விளைவிக்க, (வாய்ந்து புல்லி) கிட்டித் தழுவி, ஆனந்தமாக, மனம், ஒப்பி, இருவோரும் காம மயக்கில் ன பின்பு, (ஆபரணங்கள்) நகைகள் அடைமானம் வைக்கப்பட்டுத் (தம்மிடம் வந்தவர்) தேடின பொருளை யெல்லாம் சூறைக் காற்றுப்போல அடித்துக்கொண்டு போகின்றவர்களாகிய பொது மகளிருடன் கலந்து இன்பம் பெறும் தொழில் நல்லதாமோ (நல்லதன்று என்றபடி) சத்தி, (சரசோதி) தனித்து (அல்லது உயிர்களின் மூச்சில்) விளங்கும் ஜோதி (அல்லது சரசுவதி), திருமாது - பார்வதி (அல்லது கிே பலவித (அல்லது நிரம்பின) ரூபி (உருவத்தை உடையவள்), சுக நிலையிலேயே இருக்கின்ற நித்யகல்யாணி, என்னை ஈன்ற (மலைப்பெண்) இமயமலைப் பெண், சிவை, இறைவனுடன் ஆடுகின்ற (அபிராமி) அழகி. சிவகாமி, உமை அருளிய பாலனே! சக்ரவாளகிரியும், பலமுடைய மகா மேருமலையும் கடலும் புழுதிபட, ரத்னமயமான மயிலில் ஏறி, விளையாடி அசுரர்கள் அழிபட, சத்திவேலைச் செலுத்தித் தேவர்கள் சிறையினின்றும் வெளிவர அவர்களை மீட்டு நடனஞ்செய்தவனே!