பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி) திருப்புகழ் உரை 9 657. வேழம் என்னும் நோய் உண்ட விளாம் பழம் போல - மேனி (உள்ளிடு அற்ற உள்ளிருக்கும் சத்து அற்ற) மேனியை அடைந்து எங்கும் காம இச்சை ஊறிப் பரவி. நாள்தோறும் அறிவின்மையில் திண்மை (வலிமை) கொண்ட (மூடர்கள்) போன்று, மிகுந்த தளர்ச்சி யடைந்து நானும் மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக! (அன்று + அமணிசர்கள் கழுவேற மாள)- முன்புசமணக் குருக்கள்மார் கழுவிலேறி மாளும் வண்ணம் - (வாது செய்து அவ்) வாதில் வென்ற சிகாமணியே! மயில் வீரனே! (காள கண்டன்) விஷமுண்ட கண்டனாகிய உமை கணவனாம் சிவபிரான் தந்த பிள்ளையே! கங்கை (நதிக்கரையில் உள்ள) காசித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (நானு நைந்து விடாதருள் புரிவாயே)

  1. அமணிசர்கள் . இவர்கள் சமண குருக்கள்மார் எண்ணாயிரவர். தளம்பு நெஞ்சுடைய எண்ணா யிரஞ்சமண் தலைவராயோர், உளம்பரி வொடுகழுக்கண் யோசனை யகல மேற, வளம்பட வாதுசெய்த வாரணம் என்னு நாமம், விளங்கிய தன்று முன்னா மேதகு தராதலத்தே. திருவாலவா 49–38

"எண்ணாயிரவர்க்கும் விடாதவெதுப் பிவனால் விடுமென்ப திழித்தகவே "மண்ணா உடம்பு தங்குருதி மண்ணக் கழுவின் மிசை வைத்தார் எண்ணா யிரவர்க் கெளியரோ நாற்பத் தெண்ணாயிரவரே தக்கயாகப்பரணி 191, 219