பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேற்கடு திருப்புகழ் உரை 81 (காழ்) திண்ணியதான உறுதிகொண்ட அன்பு பூண்டுள்ள்தான மனமே (மிக) மேல் எழுச்சிகொள்ள, (வார்) பெரிய காமப்பித்தனா யிருக்கின்ற ஜாதகத்தைக் கொண்ட மகா பாதகனாகின்ற அடியேனை உனது திருவருள் கொண்டு. பார்க்க மாட்டாயா!' (உனது) அடியார்களொடு சேர்க்கமாட்டாயா, உனது நிரம்பிய திருவருளை நிரம்பத் தரமாட்டாயா? உமையவள் பெற்ற குமரேசனே! பூமியில் உள்ள பாவலர்கள் (ஒது சொலால்) ஒதும் புகழ்ச் சொல்லால், பழைய நீர் சூழ்ந்த இப் பூமியில், மேம்பட்டு, முதல் தானத்துப் (பாவலராக) விளங்குபவரான நக்கீரரை (ஆர்ப்பாய்) மகிழ்ந்து ஏற்பவனே! உன்னுடைய திருவருளைப் பாலித்து ஒரு உபதேசச் சொல்லை (எனக்கு) உபதேசித்தருளுக. (உலகத்துக்கு நீடிய பேரருளையே பொழிந்த மூல காரணனே! (நேர்) நேரிட்டு எதிர்த்த - பாவத்துக்குத் துணைக்காரணமாகிய (சமண மதத்தை ஏற்பாடு செய்த (பரப்பிவந்த) சமண குருக்கள்மார் எண்ணாயிரவர் அழிதலை அடைய (தேவாரப் பாடல்களைச் சொன்ன) கோபங்கொண்ட திருவாக்கை உடையவனே! மா - சிவமதமே பெருமை வாய்ந்த சிவமதமே பெருகும்படி (ஊக்கு முயற்சிகளைச் செய்த (அதிப்னே) தலைவனே யோக் நிலையில் இருக்கும் (மாத்தர்) பெரியவனே சிவனது குமாரனே! குகன்ே அடியார்களின் செல்வமே! வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும். (அல்லது - வேல மரங்கள் உள்ள் காட்டில் வசிக்கும்) வலிய வேட்ர்களுடைய சிறந்த மகளாம் வள்ளியின்பால் (ஆர்வம்) அன்பு பூண்ட் நல்ல ಶ್ಗ கணவனே! திருவேற்க்ள்டு என்னும் தலத்தில் ற்றிருக்கும் வேதபுரீசுரர் பெற்ற குழந்தையே! O ஆத்தா - கடவுளே. மாத்தான் - பெரியோன் மால்பிரமன் அறியாத மாத்தானை' - சுந்தரர் - 7 67 4 (வலிவலம்) மாத்து - பெருமை மாத்தாயுள்ள அழகனே' அப்பர் 4-62.7

  • வேத வித்தகன் வேற்காடு - சம்பந்தர் -157-3 திருவேற்காட்டுக்கு வேதபுரி" என்று ஒரு பெயர் உண்டு வேதபுரி என்று பெயர் பொன்னுலக நீடுதிரு வேலவனம் என்று பெயரே" திருவேற்காட்டுப் புராணம் - வேதவனச் சருக்கம்