பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 101 வெற்றி விளங்கும் உனது செவ்விய திருவடியைப் போற்றி செய்து வண்ங்கி உனது திருவிருள் கூடுமாறு. நாள்தோறும் நல்ல வாழ்வு தரும் இன்பத்தைத் தந்தருளுக. வீரம் வாய்ந்த அசுரர்களுடைய சேனைகள் பயப்படும்படி சண்டை செய்த வேலனே! பரிசுத்த மூர்த்தியே! தாய் அபிராமி பெற்ற செந்நிறத்த குழந்தையே! வேடருடைய ஒள்ளிய நெற்றிகொண்ட வள்ளிப் பெண்மீது (வேடை) வேட்கை - (காம) விருப்பம் (பற்றுள்ளம்) கொண்ட அழகிய புயவீரனே! மயிலை மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! (இன்பைத் தருவாயே) 695. ன்றோடொன்று மாறுபட்டு எழுகின்ற அலைகள் பெருகியுள்ள கடல் சூழ்ந்துள்ள உலகத்தில் இப்போது (இம்மையில்) உள்ள பிற்ப்பினுடைய இன்பத்தைப் பெறவும், வருகின்ற துன்பத்தோடு தண்ட்களோடு கூடிய நல்வின்ன . தீவினை என்னும்) னைகள் ஒழியவும். பொருந்திய உனது இரண்டு ப்ாதமலர்களை மனம் பொருந்த நினையாதவன்; இன்ப்ம் பெற உன்னுடைய திருவருள் கைகூடிக் கிடைக்க உருகுதல் இல்லாதவன்; (பத்தியால்) தளர்ச்சியுறாதவன் - தன்வசம் ஆழியாதவன், வணங்காதவன், உமாதேவியைப் பாகங்கொண்ட சிவபிரான் . மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன்; திருப்தியில்லாதவன் ஆறிவின்மை (பேதைன்ம) குறையாதவன்; அறிவு, தெளிவு. அறியாதவன். பேச்சு அற பொருந்திய ம்ெளனநிலையின்ரில் இருத்தல் இல்லாதவன், அழகிய மாதர்களின் (மயம் அது) அழகானது (அடரிட) அடர்தல் செய்ய மனத்திற் செறிந்து டங்கொள்ள அதனால் துன்பம் அடைகின்றவன் ஆகிய அடியேனும் இன்பசுகம் தருகின்ற ஆன்னுடைய அடியார்களோடு கூடிப் பொருந்தியிருக்கும் திருவிருளைத் தருவதான உனது கிருபைக்கு நிறைந்த பர்த்திரனாகி விளங்குவதான ஒரு நாள் கிடைக்குமர்!