பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 105 விளங்கும் வில்லை உடைய மன்மதன் செலுத்தின அம்பைக் காட்டிலும் மிகச் சிறந்தனவான இரண்டு கன்களை உடையவர்கள், (வார்) கச்சு (ரவிக்கை) பொருந்தியுள்ளனவும் அதிக பாரமானவைகளுமான பருத்த கொங்கைகளின் மேலே அணிந்துள்ள முத்துமணி (மாலைகள்) நிரம்பி விளங்கும் (பருவ ரதி இளமைவாய்ந்த ரதி (மன்மதன் மனைவி) போல வந்த விலை மாதர்கள். (பயிலு நடையால் மேற்கொண்டு ஒழுகும் தொழிலே நான் சுழன்று அலைந்து அந்த மாதர்கள் மீதுள்ள மோகம் என்கின்ற (காம இச்சை என்கின்ற) பெருங்குழியிலே மயங்கி விழலாமோ? (விழலாகாது என்றபடி). கணகணென ஒலிக்கின்ற வீர தண்டைகள் (சரணமதிலே) திருவடிகளிலே விளங்கத் தோகைமயில் மேல் மகி ழ்ந்து விளங்கும் குமரேசனே! கோபித் துவந்த சூரனுடைய உடலை இரணடு பிளவாகிப் பிரியப் பிளந்து அவன் அலறி விழும்படி வேலைச் செலுத்தின முருகனே! அழகிய முடியாகிய சடையிற் கொன்றை, அறுகு, நிலவு, கங்கையாறு இவைதமை அணிந்தவரும் (மேரு மலையையே வில்லாகக் கொண்ட (நாயகன்) தலைவருமான் சிவனது ஒரு பாகத்தில் உள்ள (மலையரசன்) பர்வதராஜன் ஈன்ற மகள் பார்வதி பெற்ற குழந்தை யென்னும்படியாகவே வளர்ந்து, மயிலைப் பதியில் வாழ வந்துள்ள பெருமாளே! (மோகமென்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ) 697. கலவைச் சாந்தும் மணிமாலையும், கொண்ட தாமரை மொட்டுப்போன்ற கொங்கையின் மேலே - வீரம் வாய்ந்தவனும் குழப்பத்தை உண்டு பண் ணுகின்றவனும், காமவிகாரந் தருபவனுமான மன்மதன் செலுத்தின அம்புகளாலும்.