பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/688

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடம்பாக்கம்! திருப்புகழ் உரை וויגו ஆடையை (நெகிழ்க்கவும்) தளர விடவும், மோகத்தை உண்டுபண்ணவும், (நயத்துடனே) உபசார வார்த்தைகள் பேசி அங்கிருந்தபடியே, (குணுகியிட்டு) கொஞ்சிப் பேசி, (வந்தவரிடம்) உள்ள பொருள்களை எல்லாம் பறித்துப் பின்னர் (வந்தவருடைய) பொருள் வற்றினவுடன் (அற) மிகவும், கோபித்து அச்சமயத்தில் ஏதேனும் ஒரு சாக்கு (ஒரு வியாஜம்) ஒரு போலிக் காரணம் (கண்டே) கற்பித்துக் கொண்டே, (கலகமிட்டு) கலகப் போர்செய்து வந்தவரை அகன்று ஒடும்படி அடித்து, அனுப்பின பின்னர் (வரும் பங்கு அங்கு உணங்க ஒர் புதய பேருடனே), அப்படி ஒட்டப்பட்டவர்களால் வந்த பங்குப் பொருள் (அங்கு) ஒரு நாள் சுருங்க ஒரு புதிய பேர்வழியைப்பற்றி அவருடனே பொய்க் கதைகளைச் சொல்லவும் வல்ல சாமர்த்தியசாலிகள் - அத்தகையோர்களின் குணத்தைக் கண்டும் நிலை கலங்காத் மனிதனைப் போல ஒரு சிறுபொழுதேனும் நன்கு மனம் பொருந்த (உன்னை) நினைந்தும், (உன்னைத்) தரிசித் மனம் களித்தும், நறுமணமுள்ள மலர்கள் பொ 'ನ್ತಿ। உனது திருவடியை அணுகிச் சேர்வதற்கு உரிய அறிவு இல்லாத்வனாய், மிக்கு எழுகின்ற பெரிய பாவியாகிய என்னை ஆண்டு அருளுவையேர் (ஆண்டு அருளுக என்றபடி) * வில்லைக்கொண்டு (வில்லால்) நன்றாய்த் தன்னை அடிக்கும்படியான மனத்தைத் (தந்து) அருச்சுனனுக்குக் கொடுத்தும், (அந்தணன்) மறையோனும் தாமரை மலர் மீது வீற்றிருப்பவனுமான பிரமனுடைய (நடுத் தலையை உச்சித் தலையை அரிந்தும், அந்தத் தலையிலே பலிப்பிச்சை ஏற்றும், திரிபுரத்தில் எரிபுகும்படி சிரித்தும் - அருள் விளையாடல்கள் செய்த சிவனுடைய (இடது) பாகத்தில் இருப்பவளாம் பார்வதிதேவி_அருளிய அழகு முருகனே! f அந்தணன் தா என்பது அந்தணந்தா எனச் சந்தநோக்கி மருவிற்று. இனி அம் தண் அம் தாமரை எனப் பிரித்து அழகிய குளிர்ந்த நீரில் தோன்றும் தாமரை எனலுமாம் (அம் - அழகு நீர்.)

  1. பிரமன் நடுத் தலையை அளித்தது - பாடல் 285, பக்கம் - 209 கீழ்க்குறிப்பு.

(தொடர்ச்சி பக்கம் 130 பார்க்க.)