பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/718

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரமேரூர்) திருப்புகழ் உரை 159 “್ಲಿ: னையும், பன்னிரண்டு தோள்களையும், அழகிய திருக்கரத்தில் உள்ள போரில் வெற்றி கொள்ளும் வ்ேலாயுதத்தையும் என்று நான் தியானிப்பேனோ (அல்லது) என்றும் - எப்போதும் நினைக்கமாட்டேனோ! (நினைக்க வேண்டும் என்றபடி). (பால சந்திரனை) இளம் பிறையைச் சூடியுள்ள சிவனும், அழகிய (அல்ல்து சந்த சுரங்கள் கொண்ட) வேத மந்த்ர உருவத்தளான அம்பிகை, (வாணி) கலைமகளை ஒரு கூறாக உடையவள், ஐந்து மலர்ப் பாணங்களைப் படையாகக் கொண்டவள் ப்ார்வதி பெற்ற குழந்தையே! ந்து மாயை, ஐந்து வேகம், ஐந்து பூதம், ஐந் நாதம் வாழ்கின்ற பெரிய (சராசரங்கள் - இயங்கு திணை நிலத்திணைப் பொருள்கள் - அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள்) இவைகள் எல்லாவற்றிலும் உறைபவனே! வேலை வேண்டிய வேளையில் சமயத்தில் ஆன்பு மிக்கு வந்த (ஒற்றைக் கொம்புடைய விநாயக மூர்த்தியாம் யான்னய்ைக் கிண்டு வேடர்பெண் - வள்ளி ஓடி அஞ்சி வந்தபோது (அவளை) அணைந்தவனே! (வீர் மங்கை) வீர லகூழ்மி, வாரி மங்கை பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, (பாரின் மங்கை) பூதேவி இவர்கள் (மங்களமாக) விளங்கும் - மேருமங்கை எனப்படும் உத்தரமேரூரில் ஆட்சி புரியும் பெருமாளே, (தாளும், ஆனனங்களும், தோளும், வேலும் நினைவேனோ) ஐம்புலன்களை வேகமாகச் செலுத்தும் சுவை, ஒளி, ஊறு ஒலி நூற்றம் எனவும் கொள்வர்: மனோவேகம் வாயுவேகம், ஒலிவேகம், ஒளிவேகம், அசுவவேகம், அசுவகதி 5: மல்லகதி, மயூரகதி, வானரகதி, வியாக்ரகதி, விடபகதி (அல்லது சரகதி, சசகதி) எனவும் கூறலாம் பஞ்ச தாரை-இவை விக்கிதம், வற்கிதம், உபகண்டம், சவம், உபசவம், அல்லது மாசவம் என்ற ஐவகைக் குதிரைநடை - திருவாலவா - 28-47, பூதம் ஐந்து நிலம், நீர் தி. காற்று. விசும்பு. நாதம் ஐந்து (இது சத்தம் - ஓசை 5) தோற் கருவி துளைக் கருவி நரப்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே - அப்பர் 63.8-1. நாதத்தினி லாடி.தேவர் பிரானே. திருமந்திரம் 2756. x வேலை - வேளை: O வாரி கடல், நீர் வாரிமங்கை - கங்கை எனலுமாம்.