பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/750

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவை திருப்புகழ் உரை 191 சமயம், நேரம் என்பது இல்லாமல் (வசைப் பேச்சுக்களை) பழிப்புச் சொற்களைப் பேசுபவர்கள், (வேசிகள்) பரத்தையர் எனப்படுவோர்களாவார், இசையில் ராகங்களில் (மோகிகள்) ஆசை கொள்பவர் - (ஆகிய விலைமாதர்) மீது மனம் கசிதலுற்று அழியும் ஆசையில் திரிகின்ற சிறியேனும் - திருமால், பிரமா, சிவனார், தேவர், முநிவர்கள், இந்திரன் முதலானோர் தொழும்படியான மகா தவத்தைப் பெற்ற (உனது) இரண்டு திருவடிகளையே நாளும் மறவாமல் - நல்வாழ்வைத் தரவல்ல சிவபோகத்தை விளக்கும் நல்ல நூல்கள் கூறிய வழியையே (நான்) விரும்பி, (வினாவுடனே) ஆராய்ச்சி அறிவுடன் உன்னைத் தொழுது வாழும் வரத்தைத் தருவாய், அடியேனுடைய வருத்தங்களை நீக்கி யருள்வாயே, நீலநிற அழகி, (கோமளி) இளமை வாய்ந்தவள், (யாமளி) பச்சை நிறத்தை உடையவள், கூத்துக்கள் பல பயிலும் நாரணி, (பூரணி) நிறைந்தவள், சிறந்த (பஞ்சவி) -பஞ்சமி ஐந்தாவது சக்தியாகிய அநுக்கிரக சக்தி, (சூலினி) திரிசூலத்தைத் தரித்தவள், (மாலினி) மாலையை அணிந்தவள். உமையவள், காளி. அன்பர்கள் (அல்லது - தன் அன்புக்கு உரிய சிவன்) பக்கம் விளங்கி உதவும் (மாதவியாள்) குருக்கத்திக்கொடி போன்றவள்) துர்க்கை, சிவகாமசுந்தரி - தந்த குழந்தையே! கங்கை நீர் தங்கும் பெருஞ் சடைப்பிரான் பெற்ற (தேசிக) குருமூர்த்தியே! முருகேசனே! ஆலிலையி லிருந்தபடியே உலகத்தில் உள்ளவர்கள் நிலைபெற்று வாழவும், பெரிய உலகங்களெல்லாம் நிலை பெற்று விளங்கவும் காக்கின்ற (ஆயன்) இடையர் குலத்துத் திருமால், நம் நமக்கு உரிய (அல்லது அம் - அழகிய) திருவூரகம் என்னும் தலத்தில் விளங்கும் திருமாலின் அழகிய மருகனே!