பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/851

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 770. கழல் பெற தானத்தன தான தனந்த, தானத்தன தான தனந்த தானத்தன தான தனந்த தனதான ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த ஊசற்கடு நாறு குரம்பை மறைநாலும். ஒதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து ஒடித்தடு மாறி யுழன்று தளர்வாகிக் கூனித்தடி யோடு நடந்து ஈணப்படு கோழை மிகுந்த கூளச்சட மீதை யுகந்து புவிமீதே. கூசப்பிர மான ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்க எகன்று கோலக்கழ லேபெற இன்று அருள்வாயே! *சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து சேனைச்சம னோர்கழு வின்கண் மிசையேறத். தீரத்திரு நீறு புரிந்து மீணக்கொடி யோனுடல் துன்று t தீமைப்பிணி தீர வுவந்த குருநாதா: காணச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யேர்டு மொழிந்து சின்லவேடர். காணக் # கணியாக வளர்ந்து ஞானக்குற மானை மணந் காழிப்பதி மேவி யுகந்த பெருரீே

  • சேனைக்குரு - சமண குருமார்கள் சேனன்' என்னும் பட்டம் தாங்கி இருந்தனர்.

'சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமைசேர் கந்து சேனனும் கனக சேனனும் முதலாகிய பெயர் கொளா"சம்பந்தர் 3394 குருகூடல் - சம்பந்தர் காலத்தில் மதுரையிற் பாண்டி நாட்டிற் சமணகுருமாரால் சமணர் மதம் மிகப் பரவியிருந்தது. "கன்னி நாடெங்கு மிந்தக் காரமண் காடு மூடித் துன்னின" திருவிளை - சமணரைக் 3. f சம்பந்தரது இந்த லீலை - பாடல் 181 பக்கம் 420, 421, 22 கீழ்க்குறிப்பு.

  1. கணி வேங்கைமரம்

வள்ளி முன்பு வேங்கைமரமாய் முருகவேள் நின்றது - பாடல் 116 - பக்கம் 551 - 553.