பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/902

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடவூர்) திருப்புகழ் உரை 343 விரும்பி நமக்கு (இவ்வுடல்) உணவாம் என்று கொள்ளும்படிப் பூமியில் (அடங்கியாயிற்று) என்று இவ்வுடல் விழுகின்ற இறந்துபோம் அச் சமயத்தில் - தன் காலில் அழுத்திக் கட்டிவைத்துள்ள பாம்பைக் காலிற்கொண்ட அழகிய மயிலனே! அருள்புரிவாயாக. (வீட்டில்) (அரக்கு) மாளிகையில் தருமனாதிய பஞ்சபாண்டவரை இருக்கச் செய்து எளியிட்ட பாதகனாம் துரியோதனனுடைய நாட்டை ஃே போகும்படி பல சூதாட்டங்களில் ஏற்பட்ட விதிப்ரகாரம் குருகுலத்து அரசராம் (ஐவரும்)காட்டுக்குப்போப் வேறு வேடம்பூண்டு அஞ்ஞாதவாசம் (மறைவு வாசம்) செய்திருந்த நாளின் முடிவு பார்த்து, அந்த நாள் முடிந்திடவே, அல்லது நூற்றுவரை முடித்திடவே (அழிவு செய்யவே), ஒரு பாரத யுத்தத்தை மேற்புனைவித்த - மேலே நடக்கும்படிச் செய்த மகா வீர மாயவராம் திருமாலின் மருகனே! சூரனது பட்டணமாம் மகேந்திரபுரியின் கோட்டைகளை அழித்து, அசுரர் தலைவனான சூரன் கோ' என்று அலற, அவனது நகரத்தை நெருப்பு மூட்டி எரித்த பராபரம் பொருளே! (சேகரனே) அழகனே! கோக்கப்பட்ட ரத்ன ஒளிக்கு நிகரான கூரிய வேலனே! கூற்றுவன் இறந்து போம்படி உதைத்த பார்வதி. யம்மையாருக்கு இனிமைதரும் பெண்ணாகிய மான் மகள் (மானின் மகள் - அல்லது மால்மகள் - மாலின்மகள்) வள்ளியின் மலையன்ன கொங்கைக்கு உரிய தலைவனே! திருக்கடவூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (அருள் புரிவாயே) (342 ஆம் பக்கம் தொடர்ச்சி) மாடு மேய்ப்பவனாகவும், துரோபதை - மாலினி என்னும் பேருடன் விராடராஜன் மனைவியிடத்திலும் - அமர்ந்து காலம் கழித்த வரலாறு இங்கு குறிக்கப்பட்டுளது 1 கூற்றைப் பார்வதி உதைத்தது: - பாடல் 751-பக்கம் 240, பாடல் 399-பக்கம் 51).