பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/904

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கடவூரி திருப்புகழ் உரை 345 790. குலம்போல மூன்று கிளைகளாக ஒடுகின்ற பாம்பு போன்ற பிராணவாயுவை வெளியேறாது அடக்கிப், பரிசுத்தமான பரவெளி ஒளியைக் காணவும் முத்தி நிலை கைகூடவும். சூழ்ந்துள்ள ஆணவ இருளாம் உருவம் அழிபட யோக நெருப்பில் அதை எரித்து, ஜோதி ரத்னபீடம் அமைந்துள்ள (மடம் மேவி) நிர்மல வீட்டை அடைந்து (மேலை வெளி) அந்த மேலைப் பெருவெளியிலே (பர ஆகாச வெளியில்) ஆயிரத்தெட்டு இதழோடும் கூடியதான மேலான குருகமலத்தில் சேர்ந்து (அருணாசலத்தின் உடன் மூழ்கி) துவாதசாந்தத் தானத்தில் சிவஞான ஒளியாம் இன்பப் புனலில் முழுகி. வேல் மயில் வாகனம் இவைதம் தரிசன ஒளியை அந்த நிலையிலே கிடைக்கப்பெற்று, முத்தி நிலையைச் சிறப்புடன் பெறும் அருளினைத் தந்தருளுக. லமிட்டு (இரக்க ஒலியிட்டு) அசுரரும் கடல் எட்டும் (எண்திசைக் கடலும்) சக்ரவாள ரியும் அழிபடவும், கிரெள்ஞ்சகிரி தொளை பட ஊடுருவும்படியாகவும் வேலாயுதத்தைச் செலுத்தின மயில் வீரனே! சொல்லப்பட்ட (குறமான்) வள்ளியின் (வனத்தில்) தினைப் புனக்காட்டிற் சென்று அவளுடைய காலைவ்ருடி (அன்புகாட்டி) (அவளது) உள்ளத்தே ப்திய ஒம் என்கின்ற் பிரணவ உப்தேசமாகிய் (வித்த்ொடு) ப்பொருளோடு (அவள் உள்ளத்தே பதிய ஒம் எனும் பிரணவ உபதேசம் செய்து) அணைந்தவனே! (344-ஆம் பக்கம் தொடர்ச்சி) X கால் பிடித்து - என்பதற்கு (வள்ளியின்) பிராணவாயுவை அடக்கி எனவும் பொருள் காண்கின்றனர் (உபதேச வித்து ஒம் என்னும் பிரணவப்பொருள் - பாடல் 224-பக்கம் 64 பார்க்க); இனி, "உள் ஒம் என் உபதேசவித்தோடு அணைவோனே" - என்றது . ஒம் எனும் பிரணவ உபதேசத்துக்கு வித்தாகிய மூலப்பொருளாகிய விநாயக மூர்த்தியைத் தமது உள்ளத்தே தியானித்து (அவர் உதவி கொண்டு - வள்ளியை அணைந்தவனே - என்னும் பொருளும் கொள்ளக் கிடக்கின்றது - பாடல் 639-பக்கம் 49.3 கீழ்க் குறிப்பைப் பார்க்க