பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/920

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 361 குளம்படி போன்ற அல்குலில் (சளப்படும்) துன்பப்படும் இந்தப் பிறப்பு என்னும் கடலை நான் தாண்டி உய்ய இனி (அடியேனைக்) குறித்து - கண்பார்த்து - உனது இரண்டு அழகிய திருவடி என்னும் (புணையை) தெப்பத்தைத் தந்தருளுக. o அசுரர்களின் (அடல்) வலிமையைத் தொலைத்தழிக்க (அமர்க்களத்து) போர்க்களத்தில் (அடையப் புடைத்து) நன்றாக அலைத்து அடித்து, உலகின் (அலக்கண்) துன்பம் நீங்கக் குலக்கிரி) உயரிய கிரெளஞ்ச கிரி பொடிபட்டுதிரக், அதி-பி அதிவிT எல்லாம் வற்றிப்போகத் தேவர்கள் கற்பக லோகத்தில் (பொன்னுலகில்) குடியேற, (கமலத்தனை) தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவனைச் சிறையிற்போட்டு திரு இடைக்கழி என்னும் தலத்தில் பொருந்தி யிருப்பவனே! துதிக்கையையும் (கரடம்) மதம்பாய் சுவட்டையும் உடைய யானையின் தந்தமாகிய உலக்கைகொண்டு கொழித்து எடுக்கப்பட்ட ரத்னங்களையும், மூங்கில் முத்தையும் தினை குத்துவதுபோல (இடிப்பதுபோலக் குற்றி) இடித்து விளையாடுபவளை - (விளையாடின வள்ளியை) (கணி) வேங்கை மரங்கள் உள்ள குறவர் குறிச்சியினில்) மலைநில ஊரில் (அல்லது சோதிடம் - குறி சொல்லவல்ல குறவர் குலத்து ஊரில்) (வள்ளிமலையில்), வில்ஏந்திய குறவர்கள் நாணும்படி, (கயத்தொடு) ஐராவத ஆனை வளர்த்த தேவசேனையுடன் - கைப்பிடித்த (மணஞ்செய்த) மணவாளப் பெருமாளே! (கழற்புணையைத் தருவாயே) (360 ஆம் பக்கத் தொடர்ச்சி.) "அடுந்திறல் எயினர் சேரி அளித்திடு நீயே எங்கள் மடந்தையைக் கரவில் வெளவி வரம்பினை அழித்துத் திரா நெடுந்தனிப் பழிய தொன்று நிறுவினை; புதல்வர் கொள்ள விடந்தனை அன்னை ஊட்டின் விலக்கிடு கின்றா ருண்டோ! கந்தபுராணம் - 6 - 24 - 191.