பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/926

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 367 800. (பழி) பாவம் - குற்றம் இவைகளுக்கு இடமான (சட்டகம்) உடலாகிய இந்தக் குடிசையை எடுத்து இழிவான சொற்களைச் சொல்லும் தொழில் வினைகளை - வினையைப் பெருக்கும் செயல்களை உள்ள மாதர்கள் தருகின்ற மாயமான படுகுழியில் வீழ்ந்து நல்லபடி கரையேறும் வழி உண்டோ எனத் தடவிப் பார்த்தும் தெரியாமல், பழங்கொள்கைகளையே (ஆராய்ச்சியின்றி)ப் பிதற்றுகின்ற லோகத்தில் உள்ள முழுமூடர்கள். திரிந்து ஆசையுடன் ஒதுகின்ற பல “್ಲಿ தரும் நூல்களைத் தேடி, ஒரு பயனையும் தெளிந்துகொள்ள முடியாமல் இறந்து போவதற்கு முன்பாக உன்னுடைய தாமரைப் பதங்களை விரும்பி, உருகி, உள்ளத்தே பத்தி அமுதரசம் ஊற உனது திருப்புகழை ஒதுதற்கு அருள்வாயே! - (தெழி) முழங்குகின்ற (உவரி) உப்பு நீரைக்கொண்ட (சலராசி) கடல் மொகு மொகு என்று கொந்தளிக்கவும், பெரிய மேருமலை திடு திடு என்று இடிபட்டுப் பொடிபடவும், பலவகைய பூதர்கள் விதம் விதமாகத் திமி திமி என்று களிப்புறவும், சண்டைசெய்த சூரன் (மாமரம்) நெறு நெறு என்று முறியவும், (இதைக்கண்ட) பல தேவர்களும் ஜெய ஜெய என்று போற்றவும் கொதிக்கின்ற (கோபித்து எழும்) வேல்ாயுதத்தைச் செலுத்தினவனே! அழகு கொண்டுள்ள கடப்பமாலையை அணிந்தவனே! சரவணத்தில் (உற்பவித்தவனே) தோன்றினவனே! வேலனே! வெற்றியைத் தருவதும், (கெற்சிதம்) முழங்கி ஒலிப்பதும், நீலநிறம் உள்ளதுமான மயில்வீரனே! திரு அண்ணாமலை, திருத்தணி, (நாகமலை) திருச்செங்கோடு, பழநிநகர், (கோடை) வல்லக்கோட்டை இத்தலங்களில் வாழும் தலைவனே! திரு இடைக்கழி மேவும் பெருமாளே! (உனது திருப்புகழ் ஓத அருள்வாயே)