பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/952

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநள்ளாறு திருப்புகழ் உரை 393 இன்பம் தரத்தக்க அழகிய கூடங்கள், மாடங்கள், புதிது புதிதான நவரத்னங்கள் இழைக்கப்பட்ட மண்டபங்கள் அகன்ற தெருக்களின் பக்கத்தே வளர்கின்ற இஞ்சிகுடி என்னும் தலத்தில் பார்வதிபாகர் - சிவன் அருளிய பெருமாளே! (உனைப் பாடி வீடு புகுவதும் ஒரு நாளே!) திருநள்ளாறு. 812. பச்சைநிற முள்ளதும், ஒளி உள்ளதும் மலை. போன்றதுமான இரண்டு பெரிய கொங்கைகளைக் கொண்டு இன்பம் அனுபவிக்கும் (பொறி) வண்டுகள் (அல்ல து பொலிவு) சேர்கின்ற கூந்தலையும், (வாள்) ஒளி கொண்ட வேல் போன்றதும், தாமரையின் தகைமையது என்று சொல்லத்தக்கதும், (கயல்ஏப்) மீன் போன்றதுமான கண்களையும், ஞானஒளி வரிசையில் உள்ள வெள்ளை முத்துக்கள் என்னும்படியான ஒளிவீசும் பற்களையும், (வித்ருமம் சிலைபோல் நுதலாளிதழ்) சிலைபோல் நுதல் - வித்ருமம்போல் இதழ் வில்லுக்கு ஒப்பான நெற்றியையும், வித்ருமம் - பவளம், (பத்மம்) தாமரை, செண்பகம் இவைக்கு ஒப்பான இதழையும் (உடைய) ஞான அருட்பிரகாச அழகி, எனப்படுபவள், இச்சையெலாம் பூர்த்திசெயும் (அந்தரி) பராகாசவடிவி, பார்வதி, (மோகினி) - பேரழகி, (தத்தை) கிளி, பொன்னின் அழகுவாய்ந்த லிலைபோன்ற வயிற்றினள், இல்லறம் நடத்தும் பசுங்கிளி போல்பவள், மின்னலும் நூலும் போன்ற இடையை உடைய (அபிராமி) அழகி எல்லாக் குலத்தாருக்கும், எல்லா உடலுக்கும், உலகங்கள் எவைக்கும், இருந்த இடத்தில் இருந்தே இரண்டு (நாழி) படி நெல்கொண்டு (முப்பத்திரண்டு) அறங்களையும் எப்போதும் பங்கிட்டு அளிப்பவள் ஆகிய பார்வதி (ஏலவார் குழலியின்) குமரனே! என்று (கூறி) உள்ளம் உருகமாட்டேனோ!