பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/960

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னபுரம்) திருப்புகழ் உரை 401 (சிவகாமி) சிவகாம சுந்தரியின் ஒப்பற்ற (துார்த்தர்) காமுகர், என் தந்தையார், கோடுள்ள பாம்புமாலை அணிந்தவர் - ஆகிய சிவனுக்கு - மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற சிவஞானப் பொருளை உபதேசித்த அழகனே! தாமரை மலரில் விளங்கின அழகனே! (வள்ளிமலையில்) இருந்து தினைப்புனம் காத்த அழகுக் கிளி, அமுதன்ன உடலும் கொங்கையும் கொண்டவள். (இந்துளம்) கடப்பமலர் மாலையைக் கூந்தலில் விளங்கக்கொண்ட (அணங்கி) அழகு வடிவை உடையவளாம் (அல்லது குழலாள் தண் அங்கி குளிர்ந்த அங்கத்தை உடையவளாம்) வள்ளியின் மணவாளனே! (வரி) நீண்ட கோழிக்கொடி மேலே விளங்கும்படி நடனமாடித் தேவர்கள் போற்றுகின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த வழுவூர் என்னும் நல்ல ஊரில் வீற்றிருந்தருளும் பெருமாளே! (மறவேனே) கன்னபுரம். 815. அன்னப்பறவையின் மேல் (ஏறுபவனும்), செவ்விய நளினம் (திருமாலின் உந்தித்) தாமரையில் (சென்மி) ஜென்மித்தவனுமான (பிறந்தவனான) பிரமனுடைய (கணக்கு) (சீட்டிற் கண்ட) கணக்கில் உள்ள (அந் நியமத்து) அந்தவரை யறுக்கையின்படி - அந்தக் கணக்கின் படி, (அன்னமயம்) சோற்றின் LDILILDIT@ss (புலால்) மாமிசத்தோடு கூடியதுமான (யாக்கை) உடலானது இறந்து போகாது -அழியாது என்ற அந்த நினைவு கொண்டே (அல் நினைவு) மயக்க நினைவுகள் கொண்டே (அன்னியரில்) (தன்னெறிபுக்கு) அயலார் போன்ற பகைவர் போன்ற ஐம்புலன்களின் வழியே புகுந்து சென்றும், (ஐம்புலன்கள்) ஆட்டுவித்தபடியே ஆடியும்). (அன்னிய) வேறும் . (பின்னும்) சிறிது சிறிதாக உலவுகின்ற மூச்சு அடங்கும்படியோகம் என்கின்ற (மருள்) மயக்கத்தைத்தரும் உணர்ச்சிகொண்டு (கின்னம் உடை) துன்பத்தைத்தரும் (பன்னவை கற்று - பல் நவை கற்று - பலவிதமான குற்றத்துக்கு இடமான (நூல்களை)ச் செயல். களைப் படித்து மேற்கொண்டும், பின்பு (இன்னவை விட்டு). அங்ங்ணம் கற்ற இவைகளையும் விடுத்து (இன்னணம்) இவ்வாறாக (எய்த்து) - இளைப்புற்று - (அடாமார்க்கம்) அடாத மார்க்கம் - தகாதவையான வழிகள் இன்பத்தைத் தருவன அல்ல என்று உணர்ந்து.