பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 225 ஐம்புலன்கள் தங்கி ஒடுங்கியுள்ள (பொதும்பு குகையாகிய (ஒன்றை) ஒர் உடலை - எந்நாளும் சுமந்து (அங்கும் இங்கும்) எங்கும் ரிதலுற்று உணவு தேடுகின்ற வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடிய (சண்டி) இடக்கன் - முரடன் - (பண்டன்) ஆண் தன்மையில்லாதவன் மிக்க (சஞ்சலம்) மனக் கவலை கொள்பவன், (கிஞ்சுகம் தரு வாயார்) - முருக்கி தழ்வாயார் - சிவந்த வாயிதழினர் ( ஆகிய மாதர்) அவர்களின் (தொழும்பன்) பணியாளன் - (அடியாள், (தழும்பன்) குற்றம் உள்ளவன் - இத்தகைய நான் (உன்னைப்) ப்னிந்து, என்று உனது தண்டை யணிந்த அழகிய தாமரைப் பதங்களைப் புகழ்வேனோ ! கங்கை நதியும், பொங்கி எழுகின்ற விஷம் பொருந்திய (புயங்கங்களும்) பாம்புகளும், சந்திரனும், செங்கழு நீர் மலரும் தாமரை மலரும், தும்பை மலரும், கொன்றை மலரும், எப்போதும் நறுமணமும் பொருந்தும் செஞ்சடையராம் சிவனுடைய (பங்கு) இட துபாகத்திலே வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற தேவி பார்ப்பதி (தந்து) பாலைத் தந்ததனால் இன்ப நிலை கொண்ட (பந்த சம்பந்த மூர்த்தியே கொடிய (குண்டர்) இழிந்தோராம் சமணர்களுடைய கூட்டத்துக்கு யமனாய்த் திகழ்ந் தவனே (சமணர்களை அழித்தவனே) (பண்டிதன்) கலை வல்லவன் - புலவன், கந்த பிரான் என்று தேவர்களும் அண்டத்தவர்களும் (சகல உலகில் உள்ளவர்களும் தொழுகின்ற (பண்பையும்) தகுதியையும் - குணத்தையும் (நண்பு) அன்பையும் கொண்டுள்ள பெருமாளே (அல்லது - அண்டத்தவர் தொழும் பெருமாளே. பண்பும் நண்பும் கொண்ட (பெரியோர்) பெற்றுக் களிக்கும் - தம் உள்ளத்துள்ளே கண்டு களிக்கும் பெருமாளே!) (தண்டையம் பங்கயம் புகழ்வேனோ) " வாதிடுஞ் சமண் வேரோ டேயற வாழ்க அந்தணர் வானோ ரானென ஒது பண்டித ஞானா சாரியன்" - திருவையாற்றுப் புராணம். Ο பண்டிதன் - புலவன் " பண்டித ராய் வாழ்வார் பயின்று" ஏலாதி 9, "ஐந்துகர பண்டிதன்" என்றார் விநாயகரை (திருப்புகழ் 14)