பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 237 1108. (கோல காலத்தை விட்டு) (கோலாகலத்தை . வீன் ஆடம் பரங்கள் செய்யாமல், (ஆசுபாட) ஆசுகவிகள் பாடவும், (கொடி) கொடிக்கவி பாடவும், கோவை என்னும் பிரபந்த வகைக்க்வி பாடவும், கொடிக் கொடி காக்கைக் கூட்டங்கள் போலக் கூச்சலிடும் வாதத்தில் - தருக்கத்தில் (சண்டையில்). கோடிக் கணக்கான (கூளம்) குப்பைபோன்ற - பயனற்ற (கவிச்சேனை) கவிஞர்களின் கூட்டத்தைச் (சாட) துகைத்து வெல்வேனென்று (கெடிக்கூறு) கீர்த்தியைக் கூறும் (காளக்கவிப் புலவோன்) பெருமழைபோலக் கவிகளைப் பாடவல்ல புலவன் நான், ஒழுக்கத்துடன் உரிய காலத்தில் பெய்யும் மேகம் என்றும், பாரிஜாத தெய்வவிருகூம் என் றும், கொடையில் மேரு மலையே என்றும் (ஒதும்) (பரிசுபெறுவோர்கள்) போற்றுகின்ற (சீதரா) திருமால் அனையவனே (உன்மீது நான் ) சித்ரகவி வித்தாரகவி பாட - நீ கேட்பாயாக - என்று நான் (செல்வர்களிடம்) சொல்லி நின்று காத்திருத்தலை ஒழியேனோ ஆலகால விஷத்தைக் கொண்டு பாம்பாகிய ஆதிசேடன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, (ஆரவாரம்) பேரொலி செய்யும் கடலின் மத்தியிலே (சாயும்) பள்ளி கொண்டிருக்கும். O புயல், பாரிசாதம் என்னும் தெய்வதரு, மேரு . இவை கொடைக்கும், கருணைக்கும் பேர்போனவை. (புயவகுப்பு) " சீதரன் - திருவைத் தளிப்பவன், லக்ஷ்மீகரம் நிரம்பியவன்; அரசர்களுக்கு லகர்மீகரம் இருப்பதனால் தான் திருவுடை மன்னரைக் கணில்_திருமாலைக் கண்டேனே" என்னும் திருவாக்கு எழுந்தது .59 م-4 (كاrrgمGYتrruمتO)(35) if சித்ரகவி_இது எழுகூற்றிருக்கை ஏகாதம், கரந்துறை, இவற்றுள் சித்திரத்தில் அமைத்தற்கேற்பப் பாடும் வகையன உன. வித்தார கவி- இது ஆக மதுரம், சித்திரம், வித்தாரம், எனப்படும் கவிநான்கினுள் விரிவாகப் பாடும் பிரபந்தவகை இயல், இசை, நாடகம் முதலிய விரித்துப் பாடுங்கவி.