பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 287 கடலலையில் விரைந்துபடுகின்ற வழியையே பின்பற்றுபவர், தீவினை மிக்கு நிரம்பும் (பவமே) பாபமே பொருந்தியவர், கருணையை அடியோடு விட்டவரிடத்தையே (வா ழ்) தமது இருப்பிடமாகக் கொண்டு வாழும் (சவலைகள்) அறிவு மெலிந்தவர்கள் -அறிவினர்கள் s: விழுதற்கே உரித்தான - தக்கதான குழப்பம் கொண்ட அறிவைப் பெற்றுள்ள மனங்கொண்ட (இடும்பர்கள்) அகந்தை நெஞ்சினர்கள் - (இத்தகையோர்) இருக்கும் இடம் எங்கே என்று வினவிச் சென்று, அவருடைய (உபய அங்கமும்) சாங்கமும் உபாங்கமும் என்றும் நிலைத்திருக்கும் படியாக ஒரு (கவி) பாடல் அமைத்து - (அதில் அவரை) - (உலகம் உண்டவர் திருமால் (இவரே என்றும்). (மதனார்) மன்மதப் ப்ரபு (இவரே என்றும், (இமையவர் தரு) தேவலோகத்துக் கற்பகவிருகூம் (இவரே என்றும்). (எனும்படி மொழியா) இவ்வாறு வர்ணித்து அவர் தரக் கிடைத்த பொ ப் பெற்று, (என் அருமை) உயிரை வீணாக இழக்கின்ற இத்தொழில் என்னை விட்டு நீங்கள்தோ! கரு நிறம் கொண்ட் (கொந்தளம்) கூந்தலையுடைய (மலையாள்) மலை மகளாம் பார்வதியின் இரு கொங்கைகளின் பாலமுதத்தை உண்ட குரு மூர்த்தியே அலை வீசும் கடல் வெந்தழியும்படி அம்பைச் செலுத்தின் திருமாலின் மருகனே அருள் நிரம்பி ஒப்பற்ற அந்த (குறமா மகளிடை) சிறந்த குறப்பெண் வள்ளியிடத்தே புணர்ச்சி லீலையிற் பொருந்தின் குமரனே மயில்மீது வேகமாக எட்டுத் திசைகளையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த இளையோனே! திரிபுரத்தை நெருப்புச் சிரிப்பால் எரித்து, அம்பலத்தில் நடனம் செய்யும் சிவபிரானது இடது പ് வீற்றிருக்கும் சிவாம்பிகை, (சவுந்தரி) அழகி, உமாதேவி அருளிய குழந்தையே! மலைபோன்ற வெள்ளை யானை ஐராவதத்தின்மீது ஏறிவரும் (புரந்தான்) இந்திரனும், (அமராபதியவர்) தேவர் ஊரில் வாழ்ந்திருந்த தேவர்களும் சிறையினின்று மீளும்படி கூரிய வேலைச் செலுத்த வல்ல பெருமாளே! (உயிர் அவமே விடுவது தவிராதோ) "ஏற்மர் கடவுள் மூ எயில் எய்வுழி. தேர்முன் நின்று திசைதலை பனிப்ப. அவ்வழி ஆடினன். பாண்டரங்கம்மே." - கலித்தொகை கடவுள் வாழ்த்து, உரைப்பகுதி 11 வெண் கம்ப மால் கிரி" - என்றார் 1105-ஆம் பாடலில்