பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 315 நரி கழு அதுகள் - நரி கழுகு ஆகிய அவை மகிழ்ச்சியுற, (சோரிகள்) - ரத்தங்கள் - போர்க்களம் முழுமையும் நிறைந்து, (கூளிகள்) பேய்கள் நடனமிட, அசுரர் குலத்துக்கு ஒர் யமன் போலாகி. (நனி) மிகவும் கடல் கதறவும், மலை (கிரவுஞ்சம் எழுகிரி) பொடியாகவும், (நணுகிய) அண்டிச்சரண் புகுந்த தேவர்களுக்குச் (சீர்) செல்வம் - நல் வாழ்வு வரவும், (நணு கலர்) பகைவர்கள் இறந்துபட அவர்களை அழித்துக் கீர்த்தி பெற்ற பெருமாளே! (களைத்துப் பூமியில் உழல்வேனோ) 1139. விளங்குகின்ற வேலாயுதமோ சேல்மீனோ, பிரகாசிக்கும் வாளாயுதமோ (தாமரை) மலரோ எமன் அனுப்பியுள்ள துதோ! மானோ விஷந்தானோ இது என்றெல்லாம் (தங்கள்) கண்களைக் கூறும்படி வருகின்ற மாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, ஈற்றில் மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் - பலபல (கோளாய்) இடையூறுகள் - தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுவதே (என்) அனுபவமானால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி, (யாருக்கும்) ஆகாத லோகாயதனாகி பரிவுடன் நாடாய் வீடாய் - நாட்டிலும் வீட்டிலும் (பரிவு ஆசை கொண்டவனாகி, அடியேன் ஈடேறாமல், (பணிதியில்) செல்வச் செருக்கில் மூழ்கி மாய்ந்து விடுவேனோ (இறந்து) படுவேனே m)s அலை வீசும் கடலில் கோ கோ கோ கோ என்று (உரை கூற) கூச்சலிட்டு ஓடும் அசுரர்களை "வாடா போடா" என்று அறை கூறிப் (போருக்கு அழைப்பதாகி இத்தின் வரும் நீரினில் எழுங் குமிழி ஒத்தே பூதமதில் ஒன்று பிரியப் புலன் இறக்கும்" - சித்தியார். பரபக்கம். 1-1.14-16 "உலகாயத மேலிடவே" திருப்புகழ் 834 # கோ - இரங்கற் குறிப்பு - சூடா) பாடல் 940 அடி 7, பாடல் 826 அடி 6 பாடல் 154 அடி 7, பாடல் 171 அடி 6: பூத வேதாள வகுப்பு - வாரி கோகோ என வாய் விட" X சூரனை வெருட்டுதல் - பாடல் 118 அடி 6 பார்க்க