பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 415 உண்டு தித்திக்கப் பேசும் மொழிகள் (பதற) பதைபதைப்பு உற. கலக்கம் காட்ட (கைப்பத்மத்து) கையாகிய தாமரை - தாமரையன்ன கையில் உள்ள (ஒளிவளை) பிரகாசமுள்ள வளைகள் (வதறி) கலகலத்து (சத்திக்க) ஒலிசெய்ய, புளகம் கொண்ட கொங்கைப் பாரம், (அகலத்தில் மார்பிலே (தைக்க) அழுந்த பரிமள அமளிக்குள்) நறுமணம் வீசும் படுக்கையிலே (சிக்கி) அகப்பட்டுச் (சிறுகென) நிலை தாழுமாறு (இறுக) அழுத்தமாகக் (கைப்பற்றிக் கையால் அனைத்துத் தழுவின காமப்பற்றால் வரும் (அவசத்தில்) மயக்கிலே (சித்தத்து அறிவையும்) உள்ளத்திலே உள்ள அறிவை மிகவும் வைத்துப் (போற்றி) அதையே மிகவும் மனத்திற்கொண்டு, மாதர்களின் வசப்படுதலை விட்டு விட்டு, (உன்னை) அருச்சனை செய்து (வணங்க) ஒருபொழுதேனும் (உணர்வேனோ) உணர்ச்சி கூடேனோ! (இகல்) வலிமையையும் (வெற்றி) ெ த்தையும் கொண்ட (சத்திக் ಶೌ: கிரண சத்தியும் - ஒளி வீசும் வேலாயுதத்தையும் (முரண்) டையதும் ஆடல் செய்வதுமான பச்சைக் குதிரையாம் மயிலையும், (இரவி) சூரியனுடைய (கை) கிரணங்களை (வரவழைக்கும்) - அல்லது (இரவி) சூரியனை (கை) (தன்) தொனியால் வரவழைக்கும் - குக்குடம் கோழியின் (துவசமும்) கொடியையும், (மறமாதும்) வேடர் மகளாம் வள்ளியையும் - (இடைவைத்து) பாட்டின் யே பொருந்தவைத்துச் (சித்ரத் தமிழ் கொடு) அழகிய விசித்ரமான தமிழால் ஆய (கவி) பாடல்களை (மெத்தச் செப்பி) நிறையப் பாடியும், (பழுதற் எழுதி) குற்றமில்லா வகையில் எழுதியும், கற்பித்தும் திரியும் அன்பர்களின் பெருஞ் செல்வமே! (பகலில்) விருப்பத்துடனே தருக்கம் செய்து (பிரமையுறு - கலக செற்றம்) மயக்கம் கொண்டதும் - கலகத்தை விளைப்பதும் (செற்றம்) பகைமை ஊட்டுவதுமான ஷட் சமயிகள் - ஆறு சமயத்தினராலும் (புகலற்கு) சொல்லுதற்கும், பற்றற்கு அடைவதற்கும் அரியதான (முடியாததான) ஒப்பற்ற உபதேசப் பொருளைத் திருவாய்மலர்ந்து - குருமூர்த்தி என விளங்கி மூன்று கண்களை உடையவரும் (செக்கர்) சிவந்த சடைமீது சந்திரனை அணிந்துள்ளவருமான அப்பர்க்கு - தந்தையாம் பெருமானுக்கு ஒப்பித்து அருளிய - எடுத்துரைத்து அருளின பெருமாளே! (அர்ச்சிக்கைக்கு ஒருபொழுது உணர்வேனோ)