பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 463 அங்கே ஒப்பற்ற ஒரு (சிலம்பு) மலை போன்ற கஜேந்திரனாம் ஆனை புலம்பிட கூச்சலிட, (ஞான்று) அப்பொழுது, ஊதின பரிசுத்தமான பாஞ்சசன்னியம் என்னும் சங்கம் (ஆம் பூ பூ ஆம் LDGUGUns ஒத்தவாயினிடத்தே (முழங்கி) முழக்கம் செய்யப்பட்டு அந்த சங்க ஒசை அடங்கும் அளவில் - அடங்குவதற்குள் அவ்வளவு விரைவில், அளவு இல் - எல்லையற்ற அன்பு - பூண்டு, ஆழி (ஆழிகொண்டு) சக்கரத்தை ஏந்திவந்து (வனங்களில் ஏய்ந்து ஆள என்று) அந்த மடு இருந்த வனத்தை அடைந்து அந்த யானையை ஆண்டருள்வதற்காக (காப்பாற்று வதற்காக), (வெறும் தனி போந்து ) தாம் வேறு ஆயுத முதலிய இல்லாமல், (லகூழ்மி தேவியும் கூடவராமல்) தாம் தனியாகவே வந்து, (ஒலம் என்று) அபயம் தந்தோம் என்று உதவின மேகவர்னராம் ருமாலின் மருகனே! அழகிய (பாளை) தென்னம் பாளை எங்கும் நறுமணம் வீசுகின்ற (தேங் காவில்) இனிய பூஞ்சோலையில் ந்த ஒப்பற்ற (குன்றவர் பூந் தோகை மலை வ்ேட்ர்களின் அழகிய மயிலனைய வள்ளியின் கொங்கையை விரும்பின பெருமாளே? (வேந்தா - சேந்தா சரண் சரண் என்பது வீண்போமதொன்றல) 1188. பகைமையுடன் சண்டை செய்யும். யமனை நிகர்ப்பதும் ஆகாயத்தில் உதித்து எழுகின் றதுமான அழகிய சந்திரனுக்கும், (வாரி) கட்ல் (துயில்ா அதற்கும்) துயில் துாக்கம் கொள்ளாது ஒலித்துக்கொண்டே இருக்கும் அந்த நிலைக்கும், திபதி P மொழிகளையே பேசிக்கொண்டிருக்கும் (மாய மடவார் ங்கும்) வஞ்சனை கொண்டமாதர்களுக்கும், இடையர் குழலுாதுகின்ற இசைக்கும், (வாயும்) வாய்ந்துள்ள (நிகழ்கின்ற இள்வர்டையிற்கும்-இளம் காற்றுக்கும் தென்றலுக்கும் - (மதனாலே) மன்மதனால் (காமத்தால்) அல்லது (அதனாலே) (வேறு படு பாயலுக்குமே) - பாயல் வேறுபடுவதற்கும் - படுக்கை வேறுபடுவதற்கும் - தனித்திருப்பதற்கும், இவைகள் காரணமாக என்னுடைய பேதைப் பெண் (எய்த்து) இளைத்துப் போய் நிறம் மாறிப் போன (மேனி) உடம்பு கொஞ்சமும் கெடாதவாறு வேடர்களின் சிறந்த மகள் வள்ளியின் பொருட்டுக்கொண்ட (வேடை) காமநோய் - ஆசை - திரும்படி (நடித்து) திருவிளை. யாடல்களைச் செய்து விள்ங்கின (உன்) இரண்டு திருவடிகளுடன் பொருந்தி இப்பேதையிடமும் நீ வரவேணும்;