பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புக ழ் உரை 481 1195. தாக்குகின்ற யமன் தனது ஒப்பற்ற கூரிய வேற்படையுடன் வேதத்தில் வந்து எனது உயிரைப் பாழ்படுத்த (உடலினின்றும்) பிரிக்க (என் மேல் ஆசைகொண்டிருந்த ப்ல மாதர்களின் கூட்டமும், அயலான பிறரும்: (மூளும் அளவில்) (துக்கம்) மூண்டெழுந்தவுடன் (விசை) விசையுடன் - வேகத்துடன் (மேல் விழா) மேல் விழுந்து, (பரிதாபமுடனும்) இரக்கத்துடனே (விழிநீர் கொளா) கண்ணிர் கொண்டு நிற்க, (கொடு மோக வினையில்) கொடிய ( ப்ரபஞ்ச) மயக்கத்தின் காரணமாக, பலநாள் மூத்தவர்களாயுள்ளவர்களும், இளையவராய் உள்ளவர்களும் - (ஏது கருமம்) என்ன காரணம், இவர் (சா எனா) - இவர் இறந்ததற்கு என்று கேட்கும் சொல் - என்ற விசாரணை பிறவாத வகைக்கும், (சிலர் கூடி நடவும் இடுகாடெனா), பிணத்துக்குப்பின் கூடி நடவுங்கள் சுடுகாட்டுக்கு என்று சிலர் கூறாத வகைக்கும், (கடிது ஏழுதாகினிடை வீழ்மெனாப் பொறியறுபாவி - (இவன்) பொறியறுபாவி - புலன்களை நல்ல வழியிற் செலுத்தாத பாவி இவன் - இவனை கடிது எழுநரகினிடை வீழ்ம் எனா - விரைவில் எழுநரகிடையே வீழ்த்துங்கள் என்று (யம புரியில்) கூறாத வகைக்கும், ஏழு உலகத்தினரும், சிறந்த தேவ லோகத்தினரும், சூழ்ந்துள்ள முனிவர் கூட்டங்களும் (ஏத்திட) போற்றி நிற்க, ஈசன் அருளிய குருமூர்த்தியே வேதம் ஒலித்து நிறைந்து எழ, எழுந்தருளுவாயாக சூதாட்டம் ஆடின தருமராஜர் நாடுதோற்று - நாட்டை இழந்து, இரு ஆறு வருஷம் பன்னிரண்டு வருஷகாலம் (வனவாசம் ஏற்று) காட்டில் வாழும் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு, (இயல். தோகையுடனுமே உழுவலன்புடைய மயிலனைய துரோபதையுடன், விராட ராஜ்யத்தில் (உறை நாளில்) காலம் கழித்துவந்த நாளிலே - சூறை நிரை கொடு அவர் ஏக நிரை சூறை கொடு- பசுக்களைக் கொள்ளை அடித்துக்கொண்டு - (அவர்) துரியோதனாதியர் செல்ல, மீட்டெதிர் - ಶ್ಗ - எதிர்சென்று அப்பசுக்களை மீட்டு - தமக்குள்ள அரசாட்சி உரிமையைத் தருமாறு கேட்க ஒப்பற்ற தூதை அனுப்பப் போருக்கு உரிய வலிய ஆண்மையோடு தாக்குதலை ஒழிய அரசுரிமை தரேன் எனத் துரியோதனன் கூறத் - துர்தினின்றும் மீளவும். 31