பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/636

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 முருகவேள் திருமுறை (7- திருமுறை 'ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற எரித்தடங்கை யான அர வனைச்fசயந்தன் மருகோனே, #சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த சோமனணி குடிற்xசிலம்ப சனருள்பாலா. தோகைமயி லெனச்சிறந்த ருபிகுற மகட்கிரங்கி தோள்களிறு கிடப்பு ணர்ந்த பெருமாளே (281) 1272. வாழ்வுற தத்ததன தானனத் தத்ததன தானனத் தத்ததன தானனத் தனதான முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற் பட்டகரி போலுமத் தனமாதர். முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப் பட்டுமுகில் போல்மனத் திருள்முடிச் சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத் துக்கமுற வேமிகச் சுழலாதே. சொற்கள் பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச் சொற்கமல வாழ்வுசற் றருள்வாயே! "திருமால் எடுத்த அவதாரங்களுள் - கூர்மம், மீனம் வராகம், வாமனம், நரசிங்கம் என்னும் ஐந்து கூறப்பட்டுள்ளது. (1) கூர்மம் - ஆமை - கடல் கடைந்த போது - பாடல் 509-பக். 162 கீழ்க்குறிப்பு மத்தாக இருந்த மந்தரமலை கடலில் அழுந்தப் பார்த்தது. அப்போது திருமால் ஆயிரம் கைகளை உடைய ஆமை வடிவு கொண்டு அந்த மலையைத் தன் முதுகில் தாங்கி மத்து கொண்டு கடைவதற்கு உதவினர், "அமரர் அமுதங்கடைந் தெடுப்ப வரை... தாழாது மாயோன் வளர்கூன் புறத்து ஆமை யுருவில் தாங்கிக் கடல் மதித்து வானோர்க்கு அமுதம் உதவினான்- கூர்ம புராணம் - இந்த்ரத்துய்ம் - முத்தி அத்தியாயம் "அருள் சுரந்து மாயவன். கமடமதாம் உருவெடுத்தான் கொண்ட கூர்ம மெய் யிலக்கம் யோசனையிடங்கொண்டு வெண்டிரைக் கடற் படிந்து வீழ் மந்திரம் எழுப்பித் திண்டிறற் பெரு முதுகின் மேல் திகழுற நிறுத்தக் கண்டு தேவரும் அசுரரு முன்புபோற் கடைந்தார்: ருநெல்வேலிப் புராணம். கச்சபாலய. 13, 14. (2) மனம் - மச்சாவதாரம் - பாடல் 245. பக்கம் 108 குறிப்பு (3) வராகம் - பாடல் 503 -பக் 146 குறிப்பு. (தொ.ப. 629)