பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/695

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு எழு கூற்றிருக்கை 687 ரு நொடிப் போதில் (இரு பெரிய சிறகுகளை உடைய மயில்ே ஏறி.(ஐந்நீர்) கடலை (ஆடையாக) உடுத்துள்ள குறிஞ்சி, லை, மருதம, ! நப்தல் - எனப்படும் நால் வகைத்தான உலகு அஞ்ச அதை வலம வநதனை: நான்கு வகைத் தந்தங்களையும், மும்மதத்தையும், இரண்டு செவிகளையும், ஒப்பற்று துதிக்கை ஒன்றையும் கொண்ட மல்ையன்ன் ாவதத்தை உடைய இந்திரன் மகள் யை மணஞ் செப்து ன்ைடனை: ஒருவகையான யானைவடிவிலே இருவகைத்தாகிய - மழ களிறு முது களிறு (இளங்களிறு) (வயதான களிறு) - என் இரண்டு வகையாகவும் வரவல்ல மும்மதன்' - மும் துடன் வந்த யானைக்கு மூத்தவனாகி விளங்கி, தொங்கும் துதிக்கை முக்த்தோனாம் బ్ద ఆలి.ఆఆ4 ஆகிய கண்பதிக்குத் தம்பி ஆய் ளங்குகின்றாய். ஐந்தெழுத்து பஞ்சாக்ஷர மூலமாக நான்கு வேதங்களும் கடவுள் இவரே என உணர்த்தும் முக்கட் சுடரின் மூன்று சுடர்களைத் தமது கண்களாகக் கொண்டுள்ள :షేత్ర நல்வினை - தீவின்ை எனும் இரண்டு வினைகள்ை ஒழிக்கும் மருந்தாய் விளங்குபவருமான சிவ்னுக்கு ஒரு குருவாக அமைந்த்ாய்: முன்பொருநாள் உமாதேவியின் பெருமை வாய்ந்த முலைப் பாலை உண்டு, இயல் - இசை நாடகம் எனப்படும் முத்தமிழில் வல்லவனாய் (ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனப்படும்) நான்குவிதக் கவிபாடுவதிற் கவிராஜனாய், சுவை, , ஊறு, ஓசை நாற்றம் எனப்படும் ஐம்புலங்களுக்கும் (பஞ்சேந்திரியங்கட்கும்) உரிய உணர்ச்சிகட்கும் கிழவனாய் - பஞ்சேந்திரியங்களையும் தனது வசத்தில் உடையோனாய் - அந்த உணர்ச்சி கட்கு அடிமைப் படாதவனாய் - ஐம்புலம் வென்றோனாப் - ஆறுமுகங்களை உடைய ஷண்முக மூர்த்தியே இவன் என்று யாவரும் கூறிப் புகழும்படி (எழில்) இளமை விளங்கும் அழகுடனே (கழுமலம்) சீகாழிப்பதியில் தோ ன் றின ாப்: (அறுமீன்) கார்த்திகை மாதர்களாம் ஆறு நக்ஷத்திரங்களும் பெற்றபுதல்வனாய் விளங்கினாய், சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் எனப்படும் ஐவகைத் தெய்வத விருக்ஷங்கள் உள்ள பொன்னுலகத்துக்கு (வேந்தன்) சக்ரவர்த்தி ஆப் விளங்கி, நால் நாலு வகையானதாய், மறை (ரகசியமான) விளங்காததான தோற்றத்து (பை, முட்டை, நிலம், வியர்வை) எனப்படும் தோற்றங்களுள் ஒன்றானதும் முத்து அழகு அலை அசைதரும் அல்லது முத்தலை முப்பிரிவுகளைக் கொண்ட செவ்விய உச்சிக் (தொடர்ச்சி 688ஆம் பக்கம் பார்க்க)