பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/697

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

689 Ар. முருகன் துணை அநுபந்தம் திருப்புகழும் தெய்வங்களும் (விஷயங்களுக்கு அடுத்த எண் திருப்புகழ்ப் பாவின் எண்) பூ அருணகிரிநாதர் திருவாய்மலர்ந்த திருப்புகழ் என்னும் நூலின் பெருமைக்கு முக்கிய காரணம் அந்நூலின் நடுநில்ைப். போக்கு "தெய்வம் இகழேல்" என்னும் வைப்பிராட்டியின் நன்மொழியைப் பொன்மொழியாகப் போற்றினவர் அருணகிரியார். நரகில் உழல்பவர் இவர் இவ்ர் என அவர் கூறிய அட்வணையில் "ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்" களையும் ஒன்றாகச் சேர்த்துள்ளார். தம்மை அடிமைப்படுத்தி ஆண்டருளி மெய்ஞ்ஞானம் பாலித்த திருக்கைவேற் பெருமானைக் குறிக்கோள் தெய்வமாகக் கொண்டு, கணபதியின் பெருமையைக் கூறி அப்பெரு மானுக்கு இ யானே என்றும், சிவபிரானது சிறப்பினைக் கூறி ஆப் பெரியோனுக்குப் புதல்வோனே, குருமூர்த்தியே என்றும், திருமாலின் லீலைகளைக் கூறி அவ்வண்ணலுக்கு உகந்த ானே என்றும் திறம் விளங்கப் போற்றுவர். "வாக்கிற் கருணகிரி" எனப் பட்டம் பெற்றவராதலின், கணபதியைப் புகழுமிடத்தோ, சிவபிரானைத் தோத்திரம் சொல்லுமிடத்தோ, கேவியைச் சிறப்பிக்கும் இடத்தோ, திருமாலைப் போற்றுமிடத்தோ, இவரது வாக்கின் அழகுக்கு இணையான பகுதி மேற்சொன்ன கடவுளரைத் தனி முறையிற் போற்றும் நூல்களகத்தும் காண்டலளிது. இக்கடவுளரைப் பற்றித் திருப்புகழாதிய நூல்களில் அருணகிரியர் கூறியுள்ள விஷயங்களைத் "திருப்பு கணபதியும்", "திருப்புகழும் 歡 தேவியும் சிவனும்" "திருப்புகழும் (பார்வ ம்", "திருப்புகழும் திருமாலும்" முதலிய தலைப்புக்களின்கீழ் விளக் எழுத விரும்புகின்றேன். முதலாவது, "திருப்பு b கணபதியும்" என்பதை எடுத்துக் கொண்டு கணபதியைப் பற்றித் திருப்புகழில் உள்ள முக்கிய விஷயங்களைக் கூறுவோம்: 1. திருப்புகழும் கணபதியும் (1) கணபதிக்கு உகந்த உணவுப்பொருள்கள்: அப்ப வகைகள், அமுது, அவரை, அவல், இளநீர், எள், கடலை, கரும்பு, கற்கண்டு, கிழங்குகள், (வெண்) சர்க்கரை, சுகியன்,