பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/698

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 திருப்புகழும் தெய்வங்களும் (கணபதி) சோறு, தினைமா, துவரை, தேங்காய், தேன், நெய், பச்சரிசி, பணியாரம், பயறு, பருப்பு, வாழைப்பழம் - மாம்பழம் பலாப்பழம் - வெள்ளரிப்பழம் முதலிய பழவகைகள், பாகு பால், பிட்டு, பொரி, மாவுவகைகள், முறுக்கு லட்டு, வடை (2) கணபதியின் உருவமும் நிறமும்: ஆனை முகத்தினர் ஐந்து கரத்தினர்; ஒற்றை மருப்பினர் பிறை சூடியவர்: பவள நிறத்தினர்; பானு (சூரிய) நிறத்தினர்; திருவரையிற் பாம்பைக் கச்சாகக் கட்டியுள்ளவர்; தொப்பை வயிற்றினர்; மத்தள வயிற்றினர். (3) கணபதியின் திருவருளும் பராக்ரமமும்: அடியார்க்குக் கற்பக விருக்ஷம்போல அருளும் அன்பும் நிறைந்த கடவுள். கணங்களுக்குத் தலைவர்; வல்லபை தேவியின் கணவர் மூஷிக (பெருச்சாளி) வாகனர், கஜமுகாசுரனை அடக்கினவர் சிவபிரானது தேரின் அச்சை முறித்தவ்ர் தந்தையாம் சிவபிரானை வலம் வந்து தாயிடமிருந்து மாதுளங்கனி பரிசு பெற்றவாட்(1240); வியாச முனிவர் பூஜை செய்து நிவேதனம் வைத்துத் தொழுது சொல்லப் பாரதக்கதை முழுமையும் மேருமலையில் தமது தந்தமே எழுதுகோலாகக் கொண்டு எழுதினவர் (1019, 1095); யானையாக எதிர் தோன்றி வள்ளியைத் தமது இளவல் முருகருக்குக் கூட்டுவித்தவர்; தம்பி முருகளின் கையைப் பிடித்து (அழைத்துச்) செல்பவர் (454); ஓர் அரசன் மகள் வருந்தி அழைக்க அவளது பகைவர்களை வெருட்டி ஒட்டி அவளுக்கு உதவினவர் (4): கடல் நீரைத் தமது துதிக்கையால் உறிஞ்சினவர் (5) (4) கணபதிக்கு உகந்த வழி பாடு : தோப்பணமும், குட்டும். (5) அருணகிரியார் கணபதிக்கு இட்டழைத்த திருநாமங்களுள் அருமை வாய்ந்தன; "அம்புலி மெளலியான், ஐந்துகர பண்டிதன், குஞ்சர மாமுக விக்கின ப்ரபு, குட்டிக் கரிமுகன், ஞான தொப்பை, தொப்பையப்பன், மகோதரன், மத்தள வயிறன்" என்பன.