பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் கணபதியும் 691 (6) கணபதியும் முருகரும்: கணபதியை இடைவிடாது சிந்திப்பவர் சிந்தையில் முருகவேள் உகந்து வாழ்வர்: மதகளி றனவர தமுமகலா மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் அதிபதி முருகன்'-தேவேந்திர சங்க வகுப்பு (7) கணபதி தோத்திரம்: (திருவானைக்காத் திருப்புகழ் அஞ்சன வேல்விழி (495) என்னும் பாடலினின்றும் எடுத்துத் துதியாக அமைக்கப்பட்டது) "குஞ்சர மாமுக விக்கி னப்ரபு! அங்குச பாசகரப்ர சித்த ஓர் கொம்ப மகோதர முக்கண் விக்ரம கணராஜ கும்பிடு வார்வினை பற்றறுப்பவ! எங்கள் விநாயக நக்கர் பெற்றருள் குன்றைய ரூபக, கற்ப கப்பிளை அருள்தாராய்" கணபதியின் பராக்கிரமங்களுள் கடல்நீரை உறிஞ்சினதைக் கூறினோம். அகத்திய முநிவர் கடல் நீரை உண்டது யாவரும் அறிந்தது. கணபதி கடல் நீரைப் பருகின சரித்திரம் அத்துணைப் பிரசித்தமில்லை. ஆதலின் அச்சரித்திரத்தை ஈண்டுக் கூறுவது அவசியமாயிற்று மந்தர மலையை மத்தாக்கித் தேவர்கள் கடலைக் கடைந்தபோது மந்தரம் நீருள் அழுந்தி நிலைகுலையத் திருமால் உடனே ஒரு பெரிய ஆமை உருவெடுத்து அம் மத்தை மேலுக்கு எடுத்து வந்து நிறுத்தினர்; தேவர்கள் கடலைக் கடைந்து அமுதங் கண்டனர். பின்னர் நீரிற்கிடந்த ஆமை செருக்கடைந்து கடலைக் கலக்கி உலகங்களை அழிக்க முயல்வதைக் கண்டு அஞ்சி அடைந்த தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கிச் சிவபெருமான் விநாயக மூர்த்தியை அந்த ஆமையை அடக்க அனுப்பினர். அவர் கடல் நீரைத் தமது துதிக்கையால் உறிஞ்சினர். இங்ங்ணம் கடல்நீரைக் கணபதி துதிக்கையால் உறிஞ்சினதை அருணகிரியார் "நினது திருவடி" என்னும் திருப்புகழில், "மகர ஜலநிதி வைத்த துதிக்கர வளரு கரிமுக ஒற்றை மருப்பன்" என்ற இடத்தில் குறித்துள்ளார். இதனை "மாமனைப்போற் கோடேந்திக் குறுமுநிபோற் கடலையெலாம் வாளித்துய்த்து" என்னும் சுழியற் புராணத்தாலும், "ஏழ்கடல்,