பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 திருப்புகழும் தெய்வங்களும் (கணபதி) உண்டகை காவிரி தந்தகை" எனவரும் சுழியல் பிள்ளைத்தமிழாலும், "திரைபொரு வேலைநீர் ஒன்று பூட்கை நெடுங்கரத்துட்புக நின்றுறிஞ்ச" எனவரும் உபதேச காண்டத்தாலும் அறியலாகும். இங்ங்ணம் கடல் நீரைக் கணபதி உறிஞ்சினபொழுது ஆமையும் அத்துதிக்கையில் புகுந்தது. பின்பு, விநாயகர் தாம் உறிஞ்சின நீரை மீண்டும் நிலத்திற் சிதறும்படி உமிழ, ஆமையும் பூமியில் சிதறுண்டு விழுந்தது. அந்த ஆமையைத் தமது தந்தத்தால் குத்தி அதனோட்டைப் பிடுங்கித் தந்தையாகிய சிவபிரானிடம் தந்தனர். கோடு குத்திக் கமடங் குடைந்ததன் ஓடு தந்தைக்(கு) அடியுறை தந்தனன்" (உபதேச காண்டம், கூர்மாவதாரச் சருக்கம்) அந்த ஒட்டைச் சிவபிரான் தமது மார்பிலணிந்தனர். "முற்றலாமை. பூண்டு. சம்பந்தர் தேவாரம் கடல் நீரைக் கணபதி உறிஞ்சினபொழுது ஆமையும். அவர் துதிக்கையுட் சென்றதைக் காட்டுகின்ற விநாய்கமூர்த்தியின் சிலையுருவமும் உளது. திருத்தணிகை மலைக்கோயில் பிராகாரத்தில் (மேலண்டைப் பிராகாரம்) மத்தியிலுள்ள உச்சிப் பிள்ளையாரின் உருவததில் அவரது துதிக்கையின் மேல் உற்று நோக்கின் ஓர் ஆமை உருவத்தை இன்றும் காணலாம். திரிசிராப்பள்ளிக்கருகிலுள்ள வயலூர் என்னும் தலம் அருணகிரியாருக்கு மிக உகந்த தலம் அங்குள்ள கணபதி 'பொய்யாக் கணபதி என்னும் திருநாமத்தவர். அவரது திருவருள் உளதேல் நம்மையாண்ட முருகவேளைப் பாடச் செஞ்சொல் நெஞ்சில் எளிதில் எழும் என அருணகிரியார் கருதினார். வள்ளியம்மை பிணங்கின. பொழுது என்னை யாண்ட முருகவேள் கணபதியின் துணையை நாடினரே ஆதலின், அவரது அநுமதியைப் பெற்றே நானும் கணபதியைப் பாடிக் கணபதியாரின் திருவருளால் எனது ஆண்டவன் முருகவேளின் பெருமைகளை உ ள்ளங்குளிரப் பாடுவேனென்று துணிந்து "நிசிசரரைப் பெலியிட்டருள் பெருமாளே, நினது திருவடி சத்திமயிற்கொடி நினைவு கருதிடு புத்திகொடுத்திட.... ஒற்றை மருப்பனை.... தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே" என்னும் பாடலைப்