பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/703

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் சிவனும் ().95 சூரியனது கண் பறிக்கப்பட்டது, சரஸ்வதியின் மூக்கு அறுபட்டது. தக்கன் யாகம் அழிபட்டது. தாருகாவன முநிவர்களை அடக்குதற்பொருட்டு செய்த லீலையில் சிவன் பலியேற்றார், புலியுரி அணிந்தார், மான், மழு, துடி, கபாலம் ஏந்தினார், அரா அணிந்தார். அட்டவீரச் செயல்களுள் - பிரமன் சிரம் கொய்தது, தக்கனை அட்டது, திரிபுரம் எரித்தது, காமனைத் தகித்தது. காலனை உதைத்தது, சலந்த ராசுரனைச் சங்கரித்தது, யானையை உரித்தது கூறப்பட்டுள. இவைதம்முள் திரிபுரம் எரித்தபொழுது மேருவை வில்லாக வளைத்ததும், திரிபுராதிகள் மூவர் மாளாது பிழைத்து அருள் பெற்றதும் விளக்கப்பட்டுள. பிற பராக்ரமங்களில், கங்கையைச் சிரசிலேற்றது. சரபமாய் நரசிங்கத்தை அடக்கியது. சிங்கவுரி அணிந்தது. பிரமனுக்கும் திருமாலுக்கும் எட்டாத அழலுருவாக நின்றது. ராவணனை மலையின்கீழ் நெரித்தது. பின்னர் அவனு வாள் ஈந்தது, நஞ்சு உண்டது, திருமாலையே இடப வாகனமாகக் கொண்டது சொல்லப்பட்டுள. 9. சிவபிரானை வழிபட்டவர்கள்; சிவனடியார்கள். காஞ்சியில் உமையம்மை பூசித்தது. உமை தழுவக் குழைந்தது. உமைக்கொரு பாகம் அளித்தது. பார்த்தன் கையில் வில்லடி பட்டது. கண்ணப்பரது எச்சில் உண்டது, மணி வாசகருக்குக் குருந்தமர அடியில் குருமூர்த்தியாய்த் திகழ்ந்தது. சுந்தரருக்காகப் பரவையிடம் து.ாது சென்றது - சொல்லப்பட்டுள. 10. திருவிளையாடல்களில் (ருத்ரஜன்மராய்) சங்கத்தார் கலகத் தீர்த்தது. சமணரைக் கழுவேற்றியது. நரி பரி யாக்கியது. பிட்டுக்கு மன்சுமந்தது, எல்லாம்வல்ல சித்தரானது. பழியஞ்சினது. வலைவீசியது, மாறியாடினது, மேருவைச் சென்டாலடித்தது. வளையல் விற்றது ஆகிய திருவிளையாடல்கள் கூறப்பட்டுள. 11. நடராஜப் பெருமானுடைய திருநடனத்துக்குத் தனிப் பெருமை தந்து அதைப் பலவித சந்தங்களில் அருணகிரியார்