பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/711

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் திருமாலும் 703 யுதங்களைக் கொண்டவராதலின் "ஐயாயுத பாணி", "பஞ்சாயுதர்" பேர்பெற்றவர். பாற்கடலில் 露 ఢీన Ś ஆலிலையிற் பெருங் குறோட்டை விட்டு உறங்குபள்; பரவும் அடியார்களது வினைகெட அருள்பவர்; தேசமெல்லாம் போற்றும் பெருமை வாய்ந்தவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் ஆனவர்; கெளஸ்துப மணி மார்பர்; துழாய் மார்பர் மார்பகத்தில் லஷ்மிதேவி வீற்றிருக்கப் பெற்றவர்; மாறிலாத சிவபத்தியுடையவர்: தமது 蠶 பயனால் சிவபிரானிடம் சக்கரம் பெற்றவர். தமிழ்ச்சுவை பருகத் தமிழ்ப் பயில்வோர்கள் பின் திரிபவர்; அவர்கள் சொன்ன வண்ணம் செய்பவர்; பிரமனை ஈன்றவர்; முருகபிரானிடத்தில் நேசம் மாறாதவர் அரக்கரை அழிப்பவர்; தேவரைக் காப்பவர்; சிவபிரானது பிரம கபாலத்தில் தமது ரத்தத்தைப் பலிக் கெனப் பெய்தவர்; பார்வதிக்கு அண்ணன் சத்தியே திருமால், திருமாலே சத்தி, 2. திருமாலின் நிறம்: கடல் நிறம் (காயாம்) பூ நிறம் மேக நிறம், மரகத நிறம், கருநெல்லிமேனி, எனக் கூறப்பட்டுள 3. திருமாலின் பெயர்கள்: அச்சுதன் அரிகேசவன், ஆதி நாரணன், ஆதி மாயன், ஆதியரி, ஆதிரகுராம ஜெயமால், சுருதி யுடையவன், தயாபரவஸ்து, புருஷோத்தமன், ஜெயதுங்க முகுந்தன், ஐவர் தோழன், காக்கைச் கடவுள், காண முடியோன், (காணம் - பொன்) குணத்ரய நாதன், சகஸ்ரநாம கோபாலன், சங்கு சக்ர கதாபாணி, சீரங்க ராஜன், வடவேங்கடத்தி லுறைபவன், ரிஷிகேசன் - எனப்பல அரிய திருநாமங்கள் ஆளப்பட்டுள. 4. பராக்ரமச் செயல்கள்: (1) பாற்கடல் கடைந்தது. திருமால் வாரி (கடல்) கடைந்தார்; வாரி ஏழுங் கடைந்தார்; அமரர் ஒருபாலும், வாலி முதலானவர்கள் ஒருபாலுமாக அமுதுபெறக் கடைந்தார், மேருவை (மந்தர மலையை, இமகிரியை) மத்தாகவும் ஆயிரம் வாயுடை வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடைந்தார். திமிதிமியென்று ஒலியெழக்கடைந்தார். எழுந்த விடத்தை ஈசர்க்கு உதவினார் கிடைத்த அமுதத்தைச் சிவபக்தர்களாம்