பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/717

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் முருகரும் 709 "எதிர்த்து வந்த அசுரர் கூட்டங்களைப் பலியிட்ட பெருமாளே! உனது திருவடி, உனது வேல், உனது பரியாம் மயில், கொடியாம் சேவல் இவை தமை எனது நினைவினில் வைத்துக் கருதும் புத்தியை அடியேனுக்குப் பிராசாதிக்கவேண்டியே, நான் ஒற்றை மருப்பனை (விநாயகமூர்த்தியை) வலஞ்செய்வேன்; அவரை மலர்கொண்டும், தோத்திரச் சொற்கள் கொண்டும் அருச்சிப்பேன்; அவர் முன்னிலையில் குட்டிக் கொள்வேன்; தோப்பணம் போடுவேன்" எனக் கூறுகின்றார். "எதிரும் நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமாளே! நினது திருவடி சத்திமயிற் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட. ஒற்றை மருப்பனை வலமாக... மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பன குட்டொடு வணச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே. - திருப்புகழ் (5) இங்ங்னம் கணபதியின் பூரண அருளைப் பெற்று யாதொரு இடையூறும் இல்லாமற் சரமாரியாகத் தமது ஆண்டவருக்கு (முருகவேளுக்கு)ப் பாமாலை ஆயிரக் கணக்காகச் சூட்டி மகிழ்கின்றார். முருகவேளின் அழகு, அலங்காரம், கோலம், திறல், கருணை முதலியவற்றைத் தமக்கென்றே அமைந்த சந்தச் செந்தமிழ்ச் சொற்களால் வெகு அழகாக எடுத்தெடுத்துப் புகழ்கின்றார். அவை தம்முள் சிலவற்றை ஈங்கெடுத்துக் காட்டுவாம். (1) முருகன் அழகு: அந்தம் வெகுவான ரூபக்கார!" (41) அழகான மேனி தங்கிய வேளே!" (101) திருக்கை வேல் வடிவழகிய பெருமாளே." (802) மற்றவ ரொப்பில ரூபாதிபா! (838) இலகு கமல முகமு மழகும் எழுத அரிய பெருமாளே! (1067) லக்ஷண குமார சுப்ரமணி யோனே! (1256) வேல் என்னாது சக்தி என்றதனால் முச்சத்தியையும் குறிப்பதாகக் கொண்டு, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சத்தியாகிய வள்ளி, தேவசேனை, வேல் என மூன்றையும் கொள்ளலாம்.