பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

716 திருப்புகழும் தெய்வங்களும் (முருகர்) (15) முருகவேளைத் தொழுவோர்: சிவன், மால் பிரமன், இந்திரனாதிய தேவர்கள், முனிவர்கள். (16) முருகவேள் உறையும் இடம்: அடியார் இதயம், அடியார் கூட்டம், பணிபவர் சித்தம், குகனென்பவர் மனது, குற்றமற்றவர் உளம், ஞானிகள் சித்தம், பாவாணர் நா, மாதவர் இது வேதசிரோமுடி, விநாயகரை எப்போதும் சிந்திப்போரது சிந்தை (17) முருகவேள் திருநாமங்களுள் அருமையான ஒருசில: அடியர் காவற்காரப் பெருமாள், அடியார்க்கு நல்ல பெருமாள், ஆகம சார சொரூபன், ஆயிரங்கலை கத்தன், ஆறாதாரன். உண்டநெஞ்சறி தேன், ஊமைத்தேவர்கள் தம்பிரான், என்றும் இளையோன், கடவுட் சக்கரவர்த்தி, கல்வி கரைகண்ட புலவோன், கவிஞ ருசாத்துணைப் பெருமாள், கவிராஜப் பெருமாள், குழந்தைக் குருநாதன், குறத்தி கிங்கரன், சகலகலாதரன், சத்யவாக்யப் பெருமாள், செந்தமிழ்ப்பெருமாள், ஞானபண்டிதசாமி, தகப்பன்சாமி, நாரதகித விநோதன், பிள்ளைப் பெருமாள், முத்தமிழ் வினோதன், முத்திக்கொரு வித்து, முருகச் சிம்புள், முழுச் சேவகன், வள்ளி வேளைக்காரன். முருகன் திருநாமங்களுள் () சிறியன. சேய், வேள், குகன் என்பன: (ii) பெரியது: "வீரசேவகவுத்தண்ட தேவகுமார ஆறிருபொற் செங்கைநாயகன். (iii) முருகன் திருநாமம் அடுக்கி வந்துள்ள பாடல்கள்: 64, 144, 195, 196,247. முருகன் நாம விசேடம் கூறும் பாடல்கள்:-668, 1187 (18) முருகவேளிடம் வேண்டத் தக்கவை காட்டும் பாடலடிகள். (1) சகலதுத் கமுமறச் சகலசற் குணம்வரத் தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற்