பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் தேவசேனையும் 719 இங்ங்னம் கூறியிருந்தும் வள்ளிபாற் கொண்ட காதலே அளவுகடந்தது என்னும் மேம்பாடு புய வகுப்பில் - முருகனது வாகைப் புயங்கள் - விபுதர் குலக்குலி சன்ப யந்த செங் கையானைக் கிசைந்தன வேடர் விமலை திணைப்புன மங்கை கொங்கை கண்டு வேளைப்புகுந்தன. என்னும் இடத்தில் - முருகவேளின் புயங்கள் (தேவசேனைக்கு) உடன் பட்டுப் பொருந்தின என்று மாத்திரம் கூறி, வள்ளி கொங்கைக்கு மோகித்துக் காத்துக்கிடந்து புகுந்தன - என நுணுக்கமாக உணர்த்தியதால் ளக்கம் உறுகின்றது. பின்னும் திருப்புகழில் ஓரிடத்தில் தேவசேனையை மணந்தனர் என வாளா கூறி வள்ளியைச் சேரக் கலவி நாடகம் புரிந்தனர் முருகர் எனச் சிறப்புக் கூறப்பட்டுளது. "சுரர்கள் நாயகன் பயந்த திருவை மாமணம் புணர்ந்து குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே" (1209) (7) தேவசேனை விண்ணுலகத்து அழகிய அணங்கு என்பதைச் "சம்பைக் கொடியிடை ரம்பைக் கரசி' (585) சம்பைக் கொடியிடைவிபுதை (210), சுரகுஞ்சரி, வானபைந் தொடி’ எனவரும் இடங்களிற் காண்க H (8) தேவசேனையைக் குறிக்கும் அருஞ் சொற்றொடர்களுட் சில. அண்டத் திருமயில், தேவபூ சொர்க்கக்கிளி, தேவகுஞ்சரி, வேழமங்கை, சசிதருமயில், குஞ்சரிமான், புருகூதன் மினாள். (9) தேவசேனையைத் துதிப்பதால் வரும் பயனையும் அருணகிரியார் விளக்கியுள்ளார். தேவசேனை மேகவாகனனாம் இந்திரனது குமாரியாதலின் அந்த அம்மையார் ஊர்ந்து செல்லும் மேகம் நமது வறுமையை ஒழிக்கும் என்கின்றார். தெய்வமின் ஊர் செல்வந்து இகழும் நமது இன்மை தீர்க்கும் (கந். அந் 100) (10) தேவசேனைக்கு உரிய துதி: "அகரு ம்ருகமத களப பரிமள விகட முகபட கடின புளகித அமிர்த பூதரி: அண்டர் செழுங் கொடி குமுத வாய்மயில்; குஞ்சரி, மஞ்சரி,