பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/739

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் மயிலும் 731 (பாரதக் கதை) எழு ரு களிறு பிளிறிட நெடிய கடலுலகு நொடியில் வரும் அ கலப கக மயில்" (1998) (2) பீலியின் கொத்து அசைவதால் உண்டாகும் காற்றின் வேகத்தால் மேருமலையும் அசைந்தது. மயில் அடியிட்டுச் செல்லத் திசைகளில் உள்ள மலைகள் எல்லாம். பொடிபட்டுத் தூளாயின; அத்துாளினால் கடல் நீர் வறண்டு திட்டு (மேடு) உண்டாயிற்று (கந்அலங். 11) பிரமலோகம் - ககன கோளம் - கடற்கப்புறம் திசைக்கப்புறம் எல்லாம் மயில் திரியும், மயிலின் வேகத்தில் எட்டுத் திசையில் உள்ள நாகங்கள் அஞ்சி வீழும் (1048, 1095 கந் அலங் 96); மயில் ஆலித்து ஆதிசேடன து பனாமகுடங்களைத் தாக்க ஆந் நாகத்தின் மாணிக்கக் குவைகளும, நாகத்தின்மீது பள்ளிகொண்டிருந்தಕ್ಲಿ;"; அவரது சக்ராயுதமும் சங்கும் உருண்டு புரண்டு ன் காலின் கீழ்க் கிடப்பன வாகும் (கந் அலங். 97) (3) வாசுகியை வாயடக்கி ஆலும் (188), சேடனையும் வாசுகியையும் எடுத்து உதறும் (1212); வேளைக்காரன்வகுப்பு 4. மயிலின் உருவம்: திரிவிக்ரம அவதாரங்கொண்ட திருமால்போல காயம் வரையும் எட்டும்படியான பேருருவங்கொண்டது. (1996), இந்திரனது ஆயிரங் கண்களைப்போலத்_தோகையிற் கண்கள் பல கொண்டது. (1095); ஆடலின்போது விரிந்த கலாப மயில் மந்த்ர ரூப நிலை கொண்டது.(4) 5. மயிலின் நடனமும் விளையாடலும்: (1) நடனம்: மயில் பரதநாட்டியம் ஆடும் (1050), செஞ் செனகு சேகு தாளத்தோடு நடமாடும் (4), பேரண்டம் ஒக்க நடமாடும் (148), சேடன் முடியுங் கலங்கிட நடமாடும் (972); தேவர்கள் மகிழ்ந்து பொங்க நடமாடும். (972); மணிகள் சப்திக்க நிர்த்தம் ஆடும் (147); நடன மூர்த்தியாகிய நடராஜப் பெருமானே மகிழும்படியாகவும், அவர் கருதுதற்கு அரிதாம் வகையிலும் அழகிய நடனத்தை நடிக்கும். "நடனமிடும் இறைவர் மகிழ் கருதளிட விதமொ டழகுடனாடுங் கலபகக மயில் (1099)