பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/748

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740 திருப்புகழும் அடியார்களும் அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே! என்றார் மணிவாசகனார்; விண்டொழிந்தன நம்முடை மேல்வினை. தொண்டரோ டினிதிருந்தமையாலே - என்றார் சம்பந்தர்: "உப்யப் போந்தேனுக்கும் உண்டு கொலோ ஆரூர்த் திருமூலட்டானனுக்குப் பொய்யன்பிலா அடித்தொண்டர்க்குத் தொண்டர்ாம் புண்ணியமே. என்றார் அப்பர்; சுந்தரரோ "அடியாருக்கு அடியேன்" எனத் திருத்தொண்டத் தொகை எனத் திருப்பதிகமே பாடியுள்ளார். அருணகிரியாரோ - தாம்பாடிய திருப்புகழிற் பல இடங்களில் அடியாரோடும் கூடும் பேற்றினைத் தந்தருள என வேண்டுகின்றனர். உதாரணமாக - 'உன் அடிபேனாக் கூளன் எனினும் எனை நீ உன் அடியரொடு கூடும் வகைமையருள் புரிவாயே (121) 'உன் அடிபேணி..... உருகுதொண்டருடனதாகி அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே! (227) நின்னை உணர்ந்துருகிப் பொற்பத்மக் கழல் சேர்வார் தங் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்கச் சற்றுக் கருதாதோ' (492) நானுன் திருவடி பேணும்படி...... உன் நாமம் புகழ்பவர் பாதந் தொழ இனி நாடும் படியருள் புரிவாயே (1038) நல்ல அன்பர் கூட்டத்திற் சேரும் பேற்றினை இறைவன் தமக்குத்தந்து அருள் புரிந்தார் என்பதையும் அருண்கிரியார் ப்படையாகக் கூறிப் போதமிலேனை அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா வேலோன்" எனக்கூறி மகிழ்கின்றார். (கந்தரலங்காரம் 100) தாயுமானவர் "ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்" - என வியந்தவாறே அருணகிரியார் தாம் பெற்ற பேற்றினைக் கண்டு மகிழ்ந்த அளவில் நில்லாமல், நாம் எல்லாம் கதிபெற்று உய்ய மெய்ந்நிறைந்த ஒரு உபதேசத்தையும் செய்துள்ளார். அதது.ான் "அடியார் கூட்டத்துடன் சேர்ந்தால் அன்றிக் கதிபெற இயலாது என்னும் அருமை உபதேசம் இதைச் "சூரிற் கிரியிற் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர் குழாம் சாரிற் * யன்றி வேறிலைகான்" - என்னும் தெளிவுரையிற் காண்கின்றோம் (கந்தரலங்காரம் 49) இந்த நல்லுரையை நாம் கடைப்பிடித்துத் தொண்டர் குழாத்திற் கல்ந்து நற்கதியைப் பெறுவோமாக