பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாத ஸ்வாமிகள் அருளிச்செய்த கந்தரலங்காரம்.

  • - : 0: –

H (அந் = அந்வயம்.பொ.உ - பொழிப்புரை, சு-உ = சுருக்க உரை, கு.உ - குறிப்புரை) காப்பு. அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையில், தடய டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. (அந்) வருவார் தலையில். களிற்றினை. அட த் திருக் கோபுரத்தே அந்த வாயிலுக்கு வட அருகிற் சென்று கண்டுகொண்டேன்! ". (பொ.உ) தன்னிடம் வந்து வணங்குபவர்கள் தமது தலையில் தடபட என்று ஒலிக்கும்படி குட்டிக்கொண்டு (தனக்கு நைவேத்தியமாக வைக்கும்) சர்க்கரையைக் கப்பி உண்கின்ற துதிக்கை உடையவரும், மதம் பொழியும் (தடம்) இடத்தைக்கொண்டதான (கும்பம்) மத்தகத்தை உடையவருமான (களிற்றுக்கு) யானை முகவராம் கணபதிக்கு (இளைய இளையவரான தம்பியான (களிற்றினை) இனியவராய் எனக்கு உவப்பைத் தரும் முருகனை (அடல் அருணை) வலிமை வாய்ந்ததும், (அருண்ை) திருவண்ணா மலையில் உள்ளதுமான அழகிய கோபுரத்தில் (அந்த) யார்க்கும் பிரத்யக்ஷமாய் விள்ங்கும் (வாயிலுக்கு) வாசலுக்கு வடக்குப் பக்கத்தின் (அருகே) சமீபத்திலே போய்க் (கண்டு கொண்டேன்) நான் தரிசிக்கப் பெற்றேன்.