பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முருகவேள் திருமுறை (8 - திருமுறை "தண்டாயுதமுந் திரிசூலமும் விழத் தாக்கி யுன்னைத் திண்டாட வெட்டி விழவிடுவேன் * 燃 சுடர் வடிவாள் கண்டா யடா! அந்தகா! வந்துபார் சற்றென்கைக் கெட்டவே! (25)-என்றும், "பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டல்ாது விடேன்! “ கட்டிப் புறப்படடா சத்திவா ள்ென்றன் கையதுவே" (64) - என்றும், "வாரா தகலந்தகா வந்தபோ துயிர் வாங்குவனே" (81) எனறும. விளித்து வெருட்டி வெருட்டித் திடுக்கிட்டோடும்படி அச்சுறுத்தியுள்ளார். இதனை நோக்குமிடத்துத் திருப்புகழ் பாடிப்பாடி முருகன் திருவருள் ஊறி ஊறிச் சிந்தை தெளிந்த திண்மை நிலையில் இச் செய்யுள்கள் பாடப்பட் டிருத்தல் வேண்டும் என்பது பெறப்படும். "செங்கோடனைச் சென்று கண்டுதொழ நாலாயிரங் கண் படைத் திலனே அந்த நான்முகனே" (90). என்பது செங்கோட்டு வேலவர் திவ்விய சொரூபத்தை நேரில் தரிசித்துச் சொல்லியதாதலின் திருச்செங்கோட்டைத் தரிசனம் செய்த பிறகு கந்தரலங்காரம் பாடியிருத்தல் வேண்டும். 3. நூலாசிரியர் சந்தப்பா பாடின சதுரர் என்பது கட்டளைக் கலித்துறைகளாகிய இக் கந்தரலங்காரத்திற். "சோரநிட் டுரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே" (4) உதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே" (7) "உரையற் றுணர்வற் ಫಿಸಿ றுயிரற் றுபாயமற்றுக் Q கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே" (61) "சண்ட தண்டவெஞ்சூர், மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டி மிண்டக், கண்டுருண் டண்டர் விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே" (92) -எனவரும் உருட்டுச் சந்தப் பாக்களாற் பெறப்படும். 4. ஸ்வாமிகள் வரகவி என்பது தென்மொழி வடமொழி ஆகிய இருமொழிகளினின்றும் வாக்குப் பிரபாவம் தடையற்த்