பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (ப உ) திரிகையிலாய் - மாறுபடாத நித்தியனே இரவு - இராத்திரியையும்,எல்-பகலையும்,ஆழி-கடலையும்,மண் பூமியையும், வின் ஆகாசத்தையும், தரு மூவரின் முதல்வனாயிருந்து சிருஷ்டித்தவரும், சிர பாத்திரி - பிரம கபாலத்தைப் பலிக் கலமாகக் கொண்டவரும், கையிலாயி - கைலாசத்தையுடையவரும், ரவு - ஆரவாரத்தையுடைய, ஆநந்த நாடகி ஆநந்த நடனஞ்செய்கின்ற பரமசிவனுக்கும், சேர். அவர்பாலிருக்கின்ற, இமகோத்திரி - இமய மலையின், கையில் இடத்திலுற்பவித்து வளர்ந்த ஆயி - பார்வதிக்கும், ரமிக்கும் - மகிழ்வை விளைக்கும், மைந்தா - புதல்வனே செந்திலாய் - திருச்செந்திற்பதியோனே ஒருகால் - ஒருதரம் திரிகையில் - குலாலன்1 சக்கிரஞ்சுற்றி வருவதற்குள், ஆயிரக்கோடி சுற்றோடும் - ஆயிரங் கோடிதரஞ் சுற்றி வருவதாகிய, திருத்துளம் (என்னுடைய) மனதைத் திருத்தியருளவேண்டும். (எ று) நீ - தோன்றா எழுவாய். திருத்து பயனிலை ஏ-அசை (க உ) நித்தியமானவனே சராசரங்களைப் படைத்தும் பிரம கபாலமேந்தியும், ஆநந்த நடனஞ்செய்து கயிலாசத்திலுறைகின்ற பரமசிவனுக்கும், இமயமலையின் குமாரியாகிய பார்வதிக்கு மைந்தனே திருச்செந்திற் பதியோனே! என் உள்ளமானது குலாலன் சக்கிரம் ஒருதரம் சுற்றுவதற்குள் அநேக கோடிதரம் சுற்றி வருகின்றது. அதை அடக்கியருள வேண்டும். (கு உ) திரிகையிலான் முருகவேள் வரல் போக்கிலான் - கந்த புராணம் 2.1.1. 'குலாலன், திகிரி வருமொரு செலவினி லெழுபது செலவு வருமன பவுரிகொடலமரு திருகன்’-திருப்புகழ் 1009 மனம் அமைதிபெற, திருந்த இச்செய்யுளைப் பாராயணஞ் செய்தல் நன்று. 35. விரகதாபம்-மாலைபெறவேண்டுவது திருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க திருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை திருத்துள வாரன்னை செந்துரையன் னள்செம் மேணியென்பு திருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே (ப உ) திருத்துளவார் - திருத்துழாய் மாலையையணிந்த விஷ்ணுவினது, இகல் - கரிய நிறத்தைப் பகைக்கின்ற, போதுடன்