பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (க-உ) திருத்தணிகை, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு என்னும் மூன்று மலைகளிலும் உறைபவனே கூற்றை யுதைத்த பரமசிவனது மைந்தனே! முன் பாண்டியனது அன்டிவிைT நிமிர்த்தினதுபோல என்னை வருத்த மன்மதனது கருப்புவில்லை வளைத்தலையுந்தீர்த்தருளவேண்டும். (கு.உ) (1) சிவபிரான் கூற்றை உதைத்தது. திருப்புகழ் 339, பக்கம் 510கீழ்க்குறிப்பு (2) பாண்டியன் கூனை நிமிர்த்தின வரலாறு - திருப்புகழ் 181, பக்கம்422கிழ்க்குறிப்பு:அந்தாதி96ஆம் பாடலையும் பார்க்க (3) இச் செய்யுளின் உரையில் ஒரு குறிப்பு கவனிக்கற்பாலது. முன்பின் தென்னவன் அங்கம் நீற்றால் திருத்தியது' என வருமிடத்து முன்பின் என்றதற்கு முன்-முற்காலத்தில் பின்-பின்னே கூனையுடைய எனப் பொருள் உள்து, இவ்வுரையினும் சிறந்த உரை ஒன்றுளது. முன் என்பது காலத்தைக் குறிப்பதன்று, இடத்தையே குறிக்கும். முன்பின் என்றதற்கு முன் இடத்தும் (மார்பிலும்) பின் இடத்தும் (முதுகிலும்) எனப் பொருள் கொள்ளவேண்டும். பாண்டியனுக்கு மார்பின் முன்னும், முதுகின் பின்னும் இரண்டு கூன்கள் (வளைவுகள்) இருந்தனவாம். அந்த இரண்டு கூன்களையும் சம்பந்தப்பெருமானார் தமது திருக்கரத்தால் திருத்தி நிமிர்த்தி அருளினார்.இது ஒரு கூன் மிசை வைத்த திருக்கை, புறத்தொரு கூன்மிசை வைத்தனர் - வைத்தலுமே இருகூனும் நிமிர்ந்தன, தென்னவர் கோன் முதுகுந் தடமார்பும் இடம்பெறவே. எனவரும் தக்கயாகப்பரணி 216 ஆம் செய்யுளால் விளக்கம் உறுகின்றது.பரணி உரையாசிரியர் முன்னும் பின்னும் ஒக்க நிமிர்ந்த வாறே தட மார்பும் அழகிய முதுகும் ஆயின. இதன் கருத்து பிரத்தியட்ச சத்தி காட்டுகை; அன்றியேயும் இந்திர ஞாலமுமல்ல, பிறவுமல்ல, ஈசுவரனே வடிவுகளைப் பட்ைத்தானென்பது பிரகாசித்தபடி . இக்கூன் பாண்டியனுடம்பை ஆளுடைய பிள்ளையார் திருக்கைகளால் தடவச் சரீரமுழுவதும்பேதித்துக்கனகமயமாயிற்று என்கின்றார். (4) மன்மதனது வில்லின் கூனையும் தீர்த்தருள் - என்றது மன்மதனால் ஏற்பட்டுள்ள இவ் விரகதாபத்தை அவள் பாணப்