பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (கு-உ) பொறியுண்டு அயன் கைப்படுதல்:- பிரமனால் தலையெழுத்து எழுதப்படுதல். "என்தலைமேல் அயன் கை யெழுத்தே" (கந்அலங்.40). (2) முருகவேள் பொன்னுலகைக் காத்தது. "இமையவர் நாட்டினில் நிறை குடியேற்றிய _ _ _ தம்பிரானே. திருப்புகழ் 990-பக்கம் 866 குறிப்பு 64. பிரமனது அறியாமை சேவக மன்ன மலர்க்கோமுன் னிசொலத் தெய்வவள்ளி சேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச் சேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச் சேவக மன்ன முநிக்கெங்ங் னாணித் திகைப்புற்றதே. (ப-உ) சே-இடபவாகனத்தின்,அகம்-மேல்,மன்னுநிலைபெற்று வருகின்ற,அமலர்க்கு- பரமசிவனுக்கு ஓம் பிரணவப் பொருளை, முன்பூர்வத்தில், நீ சொல் நீ யுபதேசிக்க, தெய்வ - தெய்விகமாகிய, வள்ளிவள்ளி நாயகியினது, சே - சிவந்த அகம் அன்ன . இருதய தாமரை போன்ற, வதனாம் புய முகாரவிந்தனே கிரி-கிரவுஞ்சகிரியை, செற்றபிளந்த முழுச் சேவக ஒப்பற்ற வீரனே! மன்ன - தலைவனே! திருவாவினன்குடிச் செல்வசிறந்த பழநிப் பதிவாழுங் குமாரக் கடவுளே! கல்விச் சேவகம் - வேதமோதுந் திறத்தையும், அன்னம் - அன்னவாகனத்தையுமுடைய, முநி-பிரமா, எங்ங்ன் - எவ்விதத்தினாலே, நாணி - வெட்கி, திகைப்புற்றது. அப்பிரணவப் பொருள் தெரியாமல் மயங்கினது (எறு) திகைப்புற்றது எழுவாய், எங்கன் - பயனிலை கு - சாரியை.ஏ-அசை (க-உ) வள்ளிநாயகி யிருதய தாமரைபோன்ற வதனாம் புயனே! கிரவுஞ்சகிரியைப் பிளந்த வீரனே பழநிப்பதியானே! தலைவனே! பரமசிவனுக்கு உபதேசித்த பிரணவத்திற்கு வேதமோதுந் திறத்தையுடைய பிரம்மா பொருள் தெரியாமல் நாணித் திகைப்புற்றிருந்ததெப்படி? (கு.உ) (1) பிரமன்திகைப்புற்றது. ஒம் எனப்படும் ஒரேழுத் துண்மையை உணரான் மாமலர்ப் பெருங் கடவுளும் மயங்கினான் கந்தபுராணம் 1-16-13. "ஒம் என அதாரம் உரையாத பிரமா - திருப்புகழ். 987