பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை நோக்கிச் சென்னிமேற் கைகூப்பி உன் இடை வஞ்சிக்கொடியே, உன் கண்கள் என் தவப்பயனே என்று நலம் பாராட்டுங்குமாரக்கடவுளே! (கு.உ வள்ளியை இரண்டுகைகளாலும் தொழுதது. எயினர். மயிலை இருகை தொழுது புணர் மார்பா திருப்புகழ் 1069. 68. பொழுது விடிதலைக் கண்டு தலைவி வருந்துதல் சேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத சேகர வாரண மேவும் புயாசல தீ வினையின் சேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார் சேகர வாரண நின்கையில் வாரணஞ் சிவனொன்றே. (ப-உ) சே - (அடியார்களைக்) காத்தலில், கரவா - வஞ்சித் தலில்லாதரண-யுத்தத்தில் வலிதங்கிய, வேல் வேலாயுதத்தையுடைய, வீர வீரனே வேடச் சிறுமி - குறச்சிறுமியாகிய வள்ளி நாயகியினது: பத பாதத்தை சேகர - முடியிற் றரித்தவனே! வாரணம் - தெய்வயானைமேவும் - தழுவும், புயாசல - மலைபோன்ற புயத்தையுடையவனே தீவினையின் கொடிய வினையின், சேகு வயிரத்தை لاقےT - சங்கரிப்பவனே! ஆரண - வேதம் பூசிக்கின்ற, வெற்பாள-திருச்செங்கோட்டுமலைக் கதிபனே. நாளும் நாடோறும், த்ரியம் பகனார் - திரிநேத்திரங்களையுடைய பரமசிவனது, சேஇடபவாகனமாகிய விஷ்ணுவின், கர - கையிலிருக்கின்ற, வாரணம் - சங்குக்கும், நின் உனது, கையில் - திருக்கரத்திலிருக்கின்ற, வாரணம் கொடியாகிய கோழிக்கும், சிவனொன்றே - இரவு நீடியாமல் விடிதலைக்காட்டித் தொனி செய்தலாலுங், கூவுதலாலும், பிராணனொன்றாகவே யிருக்குமோ, (எ- று) சிவன் எழுவாய். ஒன்றே பயனிலை.இவ்விரண்டும்கவியுங் குளகம் (க.உ) அடியார்களைக் காக்கும் வேலாயுதத்தையுடை யவனே! வள்ளிநாயகி பதசேகரனே தெய்வயானை தழுவும் புயனே! வயிரமான வினையை யொழிப்பவனே திருச்செங்கோட்டு மலையையுடை யவனே! பரமசிவனுக்கு இடபவாகனமாகிய விஷ்ணுவின் கையிலிருக்கின்ற சங்கும் உனது கரத்திலிருக்கின்ற கொடியாகிய கோழியும்,பொழுது விடிதலைக் காட்டித் தொனிசெய்தலுங் கூவுதலும் ஒன்றாயிருத்தலால் அவற்றிற்குப்பிராணனும் ஒன்றாகவேயிருக்குமோ?