பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 237 (3) கஜேந்திர மோகூம் - வரலாறு - திருப்புகழ் 939, பக்கம் 731 வரலாறு. 'ஈரிருகண் செ - பார - முதலை என்பதற்கு நான்கு கண்களிையுடைய சிவந்த பெரிய முதலை - எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. கஜேந்திரனைப் பற்றிய முதலையை துதிவைத்த கரா (110), கரா நெடுவாயில் (123), நீள்கர (714) துங்கமா முதலை’ (939), பருமுதல்ை (1203) எனத் திருப்புகழில் விளக்கினார் முதுமுதலை’ (சீர்பாத வகுப்பு); சாபத்தால் முதலையாய்க் கிடந்த அந்த முத்ல்ைக்கு நான்கு கண்கள் இருந்திருக்கலாம். அல்லது சர் - இரண்டு அல்லது ஈரமுள்ள் இரு-கரிய் அல்லது பெரிய-கண் எனவும் பொருள் காணலாம். (4) புகழ்ந்து துதிப்பவர்களின் பிறவியை ஒழிப்பார் இறைவர் பேணுவார்பிணியொடும் பிறப்பறுப்பான்"சம்பந்தர் 3339 80. முருகன் கழற் சேவடியின் பெருமை சீராம ராம சிவசங்க ராதுந் திருமுடிக்குச் சீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற் சீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச் சீராம ராம ணிமையோர் மகுடச் சிகாவிம்பமே. (ப-உ) சீ . இலக்குமிக்கு நாயகனான, ராம - அழகிய, ராம - திருமாலே! சிவசங்கரா - பரமசிவனே! நூம் - உங்கள், திருமுடிக்கு அழகிய சென்னிகளுக்கு சீர் - சிறந்த தன்மையாவது, ஆம் கங்காசலத்தோடே, அரா-அரவாபரணமும், மதுகர-தேன் பொருந்திய, துழாய் - திருத்துழாய் மாலையும், என்பர் - என்று சொல்லுவார்கள்: தெள் - தெளிந்த திரை மேல் - அலையையுடைய கடலின்கண், சீரா - கவசத்தை மராம-மாமரமாய் நின்ற சூரனது நிறம் மார்பை, திறக்கபிளக்கும் படி,தொட்ட-தனதுமெய்யிற்புனைந்தசேய் கழற்கு-முருகக் கடவுளது திருவடிக்கு சீராம் - சிறப்பாயமைந்திருக்கும் அரா நெருங்கிய, மன் - நிலைபெற்ற, இமையோர் தேவர்களுடைய, மகுட கிரீடமணிந்த சிகாவிம்பம் - வட்டவடிவாகிய தலைகள் (எறு) சிகாவிம்பம்-எழுவாய்.சீராம்- பயனிலை.ஏஅசை (க.உ) பரமசிவனே! உமது திருமுடிக்குக் கங்கையும் பாம்பும் மாலையாம் திருமாலே உமது திருமுடிக்குச் சிறந்த திருத்துழாய்