பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 முருகவேள் திருமுறை 19 திருமுறை 19கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை நெடிய கழுத்த சுழித்த தே; பார்வைய 80காதநூ றாயிர கோடி வளைந்தன பூதவே தாளம் அநேகவி தங்களே. ”விழித்த பார்வைய - "சுழித்து வெருவர விழித்த விழியின" பொருகளத் தலகை வகுப்பு 18 'பூத வேதாளம் அனேக விதங்கள்: "சேனையாளென அநேக பூதமொடு செய்த பேய்களொடு செல்லவே" - தக்கயாகப்பரணி 594, பூதவேதாள வகுப்பின் சுருக்க உரை ஆதிசேடன் தன் தலையிற் சுமக்கும் அகில உலகங். களையும் ஈன்றவளாகிய தேவியின் திருமைந்தன், காங்கேயன், நக்கீரனுக்கு உதவி புரிந்தவன், குறுமுனிக்கு முத்தமிழ் போதித்தவன், பிறவிக் கடலினின்றும் என்னை மீட்டவன், தபோதனர்களின் உள்ளக் குகையில் விளங்குபவன், தேவசேனைக்கு நாயகன், மந்திரஎழுத்துக்களில் தங்கியும், அவைகட்கப்பாலும் விளங்குபவன், பத்தர்களின் போற்று. தலை ஏற்பவன், ஆறு திருப்பதி ஆதிய கணக்கிலாத் தலங்களில் வீற்றிருப்பவன். சிவந்த ஆடையன், அறுவர் முலை உண்டவன், சரவணபவன், கடப்பமாலையன், வள் காதலன், சிவகுரு திருமால் மருகன், நினைப்பவர்தம் வினைப்பகைய்ை அறுப்பவன், வள்ளியின் பொருட்டுக் கிழ வேதியனானவன், கூதள மாலை புனைந்தவன், குருபரன், குணதரன், பிரமனை விலங்கிட்டவன், வேற்கரத்தோன், வீடளிப்பவன், விநாயகருடன் போட்டியிட்டு உலகெலாம் Φ(£5 நொடியில் வலம் வந்தவன், ஆறு சமயங்களுக்கும் அப்பாற்பட்டவன், யாவும் உணர்ந்தவன், சேவற்கொடியோன் - ஆகிய முருகவேள் வேல் ஏந்திச் சூரனது சேனையுடன் பெர்ருத போர்க்களத்தில் இருள் நிறம் பொருந்தி அச்சத்தைத் தந்தன. சில பூதவே தாளங்கள், நடனம் புரிந்தன. சில தத்தம்